காதேஸ் - பர்னேயாவில் Jeffersonville, Indiana, USA 56-0527 1அவள் அவ்வளவாக பயந்திருந்தாள், எப்படியெனில் அவளுடைய இருதயம் கிட்டத்தட்ட மணிக்கு தொண்ணூறு மைல்கள் வேகத்துக்கு துடிப்பது போல காணப்பட்டது. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அவள் வீட்டிற்கு வந்து, தன்னுடைய அறையில் அதை அமைதிப்படுத்தி, சரிசெய்யும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள். நல்லது. இது எனக்கு சகோதரன் மூர் அவர்களை நினைவுக்கு கொண்டுவருகிறது. அவருடைய சிறு பையன், அவரிடத்தில், தான் பிரசங்கிக்க விரும்புவதாக கூறினான். அவனுக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அவன், “அப்பா, நான் பிரசங்கிக்க விரும்புகிறேன்” என்று அவரிடத்தில் கூறிக் கொண்டிருந்தான். எனவே ஒரு நாள் சபையார் முன்னதாக சகோதரன் மூர், “இப்பொழுது, மக்களே, இங்கே உட்கார்ந்திருக்கும், டேவிட் (உங்களுக்கு தெரியும், அங்கே அவன் தன் தலையை நிமிர்த்தி, வயதான பிரசங்கியார் போல உட்கார்ந்து கொண்டிருந்தான்) இன்றிரவு கொஞ்ச நேரம் பிரசங்கிக்க வேண்டும் என்று விரும்புகிறான்”, என்றார். எனவே, (அதை கேட்டவுடன்) அவன் தன்னுடைய இருக்கையிலிருந்து குதித்து பிரசங்க மேடையை நோக்கி ஓடினான். உங்களுக்கு தெரியும், அவன் அவ்விதமாக அங்கே ஓடி, சற்று நின்று, ஆக்ரோஷமாக பிரசங்கிக்க வேண்டுமென்று நினைத்தான். அவன் இப்பக்கமும், அப்பக்கமும் பார்த்து, “உண்மையிலேயே இதை நம்மால் செய்ய முடியாது” என்று கூறி, திரும்பவும் தன் இருக்கைக்கு சென்று அதில் உட்கார்ந்து கொண்டான். (சகோதரன் பிரான்ஹாம் சிரிக்கிறார்). இதை நம்மால் செய்ய முடியாது என்று யோசித்த அநேக நேரங்களை நான் பார்த்ததுண்டு. அநேக நேரங்களில், அது சரியாகத்தான் இருக்கிறது. 2அவர்களுடைய தாய்மார்கள் மேபலும், மீடாவும் நமக்கு பாடல்களை பாடுவது வழக்கம், மறுபடியும்அவர்கள் பாடுவதை கேட்க விரும்புகிறேன். நீங்களும் விரும்பவில்லையா? அவர்கள் பாடுவதை நான் விரும்பி கேட்பேன். ஒருவேளை நாம் மறுபடியும் அவர்களை அழைத்து அடுத்த ஞாயிறு இரவு அவர்கள் இருவருமாக சேர்ந்து, நான் பிரசங்கம் முடித்து, சபையிலிருந்து புறப்பட்டு செல்லும் சமயம் பாடும் பாடலை பாடும்படிக்கு செய்யலாம். அது என்ன பாடல் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? அடிச்சுவடுகளில் மணல்கள் அடித்து செல்லப் பட்டன, அந்நியர்...அவர்கள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார் கள்; இராஜாவோடு விருந்துண்ணும்படிக்கு, அவருடைய விருந்தினர்களாக அவரோடு கூட புசிக்கும்படிக்கு, (அவ்விதமாக அந்த பாடல் போகிறது என்று நான் நினைக்கிறேன்). அவர்கள் அந்த பாடலை பாடுவதை நான் கேட்க விரும்புகிறேன். அடுத்த ஞாயிறு இரவு அன்று அவர்கள் பாடுவதை நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா? நிச்சயமாக. மேபல் நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? டாக், அந்த சகோதரி இங்கே இருக்கிறாரா? அதை அவள் கேட்டுக்கொண்டிருக்கக்கூடும், மீடாவும் அங்கே பின்பக்கம் இருக்கிறார், எனவே அதற்காக அவர்கள் கொஞ்சம் பயிற்சி செய்துக் கொள்ளலாம், காரணம் கொஞ்ச நேரம் கழித்து இந்த பெண்கள் அவர்களை விட்டு ஓடிப்போய் விடுவார்கள், அப்படி அவர்கள் போக மாட்டார்களா? அது சரிதான். எனவே அவர்கள் இப்பொழுது கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டு, அடுத்த வாரம் பாடும்படிக்கு அவர்கள் ஆயத்தமாய் இருக்கட்டும். 3கொஞ்சம் நேரத்திற்கு முன்பு என்னுடைய குடும்பம் வெளியே புறப்பட்டு சென்றதும், நான் தனிமையில் தேவனோடு சிறிது நேரம் ஜெபிக்கும்படிக்கு இருந்தேன். இன்றிரவு நான் இங்கே வந்து கொண்டிருந்தபோது, இந்த பழைய கூடாரம் வழியாக வரும்போது, இங்கே வெளியே கார்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். அது நீண்ட நாட்களுக்கு முன்பாக நடந்த பழைய நினைவுகளை என் நினைவுக்கு கொண்டு வந்தது, எப்படியெனில் நாம் இங்கே வழக்கமாக உள்ளே வந்து, கூடி, காலை இரண்டு அல்லது மூன்று மணி வரைக்கும் தொடர்ந்து நடக்கக் கூடிய மகத்தான ஆராதனைகளை நாம் பெற்றிருந்தோம். மக்கள் அங்கே ஒரு கூட்டமாக கூடி அமர்ந்திருப்பார்கள். அந்த பழைய விசுவாசிகளில் அநேகர் இன்றைக்கு இங்கேயிருக்கும் இந்த கல்லறையில் இருக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேனென்றால் அவர்களுடைய சரீரங்கள் தான் இங்கே இருக்கிறது, ஆனால் அவர்களோ அங்கே மகிமையில் இருக்கிறார்கள். சந்ததிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது, வாலிபர்கள் கடந்து போகிறார்கள். நாம் கடந்து போய் கொஞ்ச நாட்களுக்குள், இன்னொரு வாலிப கூட்டம் நம்முடைய இடத்தை எடுத்துக்கொள்ளும். எனவே, நாம் ஒவ்வொரு நாளும் தேவனுக்கென்று, அவருக்கு மட்டுமே ஜீவிப்பது ஏற்றதாயிருக்கும். அது அவ்விதம் இருக்காதா? 4இப்பொழுது, மக்கள் துரிதமாக புறப்பட்டு, நாளை வேலைக்கு போக வேண்டிய நாள் என்று எனக்கு தெரியும். எனவே இன்றிரவு நாம் அவர்கள் முன்னமாக போகும்படிக்கு விட்டுவிடுவோம். இதற்கு பின்பு ஞானஸ்நான ஆராதனை ஏதாவது உண்டா ? நல்லது. 5இப்பொழுது, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பழைய வேதாகமம் தொட்டில் துவங்கி கல்லறை மற்றும் பரலோகம் வரைக்கும், ஆரம்பம் முதல் கடைசியாக போய்சேரும் வரைக்கும் செல்வதற்கான சாலை வரைபடமாக (Road map) இருக்கிறது, இதை நாம் நேசிக்கிறோம். ஏனெனில், முடிவு வரைக்கும் இரட்சிக்கப்படும் படிக்கான இரட்சிப்பின் திட்டத்தின் வழிமுறைகளை இதில் நாம் காணமுடியும். எனவே இதை நாம் திறப்பதற்கு முன், நம்முடைய தலைகளை சற்று தாழ்த்தியிருக்கையில், வேதாகமத்தை எழுதினவரிடத்தில் நாம் ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஆராதனையில் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எல்லாவற்றிற்காகவும் இன்னும் பாடல்களுக்காகவும் மற்றும் நடைபெற்றமற்ற எல்லாவற்றிற்கும் நாங்கள் உமக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்; “என் நாமத்தினால் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடுகிறார்களோ, அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்”, என்ற இந்த தயவுள்ள வாக்குத்தத்தத்தோடு, இந்த சிறிய கட்டிடத்தின் கூரையின் கீழாக கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கூடிவரும்படிக்கு செய்தமைக்காக நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். ஆகவே நீர் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். 6ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகள் சுவிசேஷ பிரசங்கத்துக்குப் பிறகு உலக வரலாறு மாறிக் கொண்டிருக்கும் போதும், நீரோ மாறாதவராயிருக்கிறீர் என்பதை அறிந்து கொள்ளும்போது நாங்கள் மிகவும் சந்தோஷமடைகிறோம். நேரம் மாறுகிறது, மக்கள் மாறுகிறார்கள், தேசங்களும் மாறுகிறது, வாஞ்சைகளும், மனப்பாண்மைகளும் மாறுகிறது; ஆனால் நீரோ மாறாதவராயிருக்கிறீர். பிதாவே, இன்றிரவு நாங்கள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம், ஏனெனில் நாங்கள் உம்முடைய வார்த்தையை வாசித்து, கடந்தகாலங்களில் நீர் என்னவாய் இருந்தீர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டு, இன்றைக்கும் அவ்விதமாகவே எங்களை நேசிக்கிற, மன்னிக்கிற மற்றும் புரிந்துகொள்கிற , ஒருவிசை கலிலேயாவின் மணற் கடற்கரையில் நடந்த அதே பிதாவையே நாங்கள் அணுகுகிறோம் என்பதை அறிந்திருக்கும்போது நாங்கள் சந்தோஷமடைகிறோம். மேலும் எங்களுடைய ஸ்தானத்தை அவர் எடுத்துக்கொண்டு, ஒரு பாவியாகி, சிலுவையில் அறையப்பட்டு, எங்களுடைய பாவங்களை தன் மேலாக எடுத்துக்கொண்டு, அதை சுமந்து எடுத்துப்போடும்படிக்கு எங்களுக்காக சிலுவையில் மரித்து, பாதாளத்தில் தள்ளப்பட்டார். ஆனால் தீர்க்கதரிசியோ, “நான் அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன், என்னுடைய பரிசுத்தரை அழிவை காணவிடேன்”, என்று கூறியிருக்கிறார். எனவே நீர் மூன்றாம் நாள் உயிர்தெழுந்து, உன்னதத்திற்கு ஏறி, இன்றிரவு மாட்சிமைமிக்க தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருந்து, நாங்கள் செய்கிற அறிக்கையின் நிமித்தம் எங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறீர். மேலும் எங்களுக்கு சொந்தமான, தனிப்பட்ட ஜீவனானது உம்முடைய இரத்தத்தினால் வாங்கப்பட்டி ருக்கிறது என்றும் மற்றும் நீர் மரித்து, கல்வாரியில் எங்களுக்காக பாவ பரிகாரம் செய்து, உம்முடைய மீட்பின் திட்டத்தில் வைத்திருக்கிற எந்த ஒன்றுக்கும் எங்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அறிக்கை செய்யக் கூடிய சிலாக்கியத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர். 7எனவே, பிதாவே, இங்கே இந்த கூரையின் கீழாக இன்றிரவு இந்த கூடாரத்தில் கூடியிருக்கும் ஒவ்வொரு யாத்ரிகனுக்காக (Pilgrim) விசேஷித்த ஆசீர்வாதத்தை நாங்கள் கேட்கிறோம். மேலும், பிதாவே, பேழைக்கு வெளியில் உம்மை அறியாமலிருக்கும் புருஷர்கள், ஸ்திரீகள் மற்றும் பையன்கள், பெண் பிள்ளைகளோடிருந்து நீர் தாமே அவர்களை இன்றிரவு உம்மண்டை இழுத்துக் கொள்ளும். பரிசுத்த ஆவியானவர் தாமே, குறிப்பாக அவர்களுடைய இருதயத்தின் கதவை தட்டி, நம்முடைய பிதாவாகிய தேவனிடத்தில் கவர்ந்து இழுத்துக் கொள்ளும்படி செய்வாராக. இதை அளியும் கர்த்தாவே. ஒவ்வொரு சபையையும் மற்றும் இன்று பகலிலும், இன்றிரவிலும், உலக முழுவதும் நடக்கும் கூட்டங்களையும் ஆசீர்வதியும். தேவன் மகிமையை பெற்றுக்கொள்ளும்படிக்கு வார்த்தையை கேட்கவும், புரிந்துகொள்ளவும் மக்களுடைய காதுகளை விருத்தசேதனம் பண்ணும்படிக்கு, ஊழியக்காரர்கள் யாவரும் பிரசங்கிக்கத்தக்கதான ஏவுதலை பெற்றுக் கொள்வார்களாக. இதை நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 8நாம் சிலுவையண்டை வந்து வார்த்தையைக் குறித்து சிறிது போதிக்க இருக்கையில், தேவன் தாமே இன்றிரவு அதனோடு கூட ஆசீர்வாதத்தைக் கூட்டுவாராக. இது ஒரு வகையில் ஞாயிறு பள்ளி பாடத்தைப் போல் இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு முன்னர், நான் அங்கே உட்கார்ந்து.... சிந்தித்துக் கொண்டிருந்தேன். சில சமயம் அதுதாமே ஆச்சரியமான காரியமாக... இங்கே இந்த பட்டணத்தில் ஒரு பெரிய, காலியான அரங்கம் இருக்கிறது. அது அந்த பழைய கிரீன் அரங்கம் (GreenTheatre). அதில்ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரம் பேர் வரைக்கும் உட்கார வைக்க முடியும் என்று எண்ணுகிறேன். அங்கே நமக்கு கொஞ்ச நாட்கள் அல்லது கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு தொடர்ச்சியாக, சில ஞாயிறு கூட்டங்களையும், அதில் ஒரு ஞாயிறு சுகமளிக்கும் கூட்டத்தையும் இந்த பழைய கிரீன் அரங்கத்தில் நடத்தி, அதை இங்கிருக்கும் உள்ளூர் நிலையத்திலிருந்து ஒலிபரப்புவோமானால் அது மிகவும் அருமையாயிருக்கும். ஏனெனில், அது அவ்வளவு செலவு பிடிக்காது, ஒரு மணிநேரத்திற்கு ஏறக்குறைய பத்தொன்பது, இருபது டாலர்கள் ஆகலாம். அதற்கான செலவை நானே செலுத்த விரும்புகிறேன், ஏனெனில் அது வெளியில் நடக்கும் என்னுடைய கூட்டம், அதின் செலவை நானே ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். அது இங்கிருக்கும் மக்களை கூட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக செய்கிறோம். அவர்களை அனுப்பக்கூடிய நல்ல இடமும் மற்றும் மனம் மாறினவர்களை ... 9இன்று காலை நம்முடைய மேய்ப்பர் பெரிய வலையைக் கொண்டு மீன் பிடிப்பதை பற்றி பேசினதைக் கேட்டு நான் மிகவும் களிகூர்ந்தேன். நீங்கள் எல்லோரும் அவ்விதமே களிகூர்ந்திருப்பீர்கள் என்று நான் அறிவேன். அது சரிதான். அவர் கூறினவிதமாக நாம் மீன்களை வலைக்குள் கொண்டு வரவேண்டும். ஆம், அதன் பிறகு நாம் எல்லோரும் சேர்ந்திருக்கும்போது, நாம் நிற்போம். 10இப்பொழுது, நேற்று மாலை சகோதரன் ஜூனியர் கேஷ் அவர்களிடத்தில் இருந்தோம் (அவருடைய பெயர் அதுதான் என்று விசுவாசிக்கிறேன்), அவருடைய இடத்தில் பேசும்படிக்கு நாங்கள் அங்கே சென்றிருந்தோம், அங்கே தேவன் ஆச்சரியமான விதத்தில் இறங்கி வந்தார். அக்கூட்டத்தில் ஒரு பெண்ணை அழைத்து வந்திருந்தார்கள். இயற்கையானவிதத்தில் பார்க்கும்போது, அதாவது உங்கள் கண்ணால் நீங்கள் பார்க்க கூடுமானால், நான் பார்த்த ஒரு காரியம் என்னவெனில், அது இந்தியானாவின் கீழ் பகுதியிலிருந்து வந்திருந்த ஒரு கறுப்பின பெண், அவள் விபத்துக்குள்ளாகி, அவளுடைய காதிலும் குரல்வளையிலும் இருக்கும் நரம்புகள் துண்டிக்கப்பட்டு, அதினிமித்தம் அவள் பேசவும், கேட்கவும் கூடாத நிலையில் மேடைக்கு வந்திருந்தாள், மற்றும் ஏதோ ஓரிடத்தில் ஒரு இரத்த நாளம் நசுக்கப்பட்டு அதினிமித்தம் அவளுடைய ஒரு பக்கம் செயலிழந்து போயிருந்தது. அந்த பெண், அவள் அந்த பெரிய இடுப்பு காலுறுப்பு தலைப்பட்டைகளை (Big braces) அணிந்திருந்தாள், அவளுடைய தாய், அவள் மேலே வரும்படிக்கு, அவளை வழிநடத்தினாள்; அவள் ஒரு வாலிப பெண், சிறுமி, ஒருவேளை பதினாறு அல்லது ஏதோ அதற்கொத்த வயதுடையவளாய் இருக்கலாம். 11ஏதோ ஒரு விதத்தில், பரிசுத்த ஆவியானவர் ஆப்பிரிக்காவை என் கண் முன் காட்சியில் கொண்டு வந்தார். அதை நான் நோக்கிப் பார்த்துக்கொண் டிருந்தேன். இந்த புத்தகத்திலும் ஒரு தரிசனத்தை குறித்து எழுதிவைத்திருக்கிறேன், அதில் மறுபடியும் ஆப்பிரிக்காவுக்கு செல்லும்போது அது ஆப்பிரிக்காவின் முதல் கூட்டத்தைக் காட்டிலும் மிக பெரிதான ஒன்றாக இருக்கும். அங்கே கூட்டத்தில் மக்கள் என்ன நடக்கிறது என்று அறியாமல் இருந்தபோது, ஆனால் திடீரென்று ஒரு தரிசனம் தோன்ற; நானும்,“பரலோக பிதாவே...” அதற்காக நாம் அற்புதங்களை கேட்கக்கூடாது என்றில்லை. வேதாகமம், “இந்த பெலவீனமுள்ள, விபச்சார சந்ததியார் அற்புதங்களை தேடுகிறார்கள்”, என்று கூறகிறது. நாம் அற்புதங்களை தேடி செல்வதில்லை, ஆனால் தேவன் அற்புதங்களை நடப்பிக்கிறார். சரியாக அவர் அதைகூறிக் கொண்டிருக்கும்போதே, அவர் அற்புதங்களை நடப்பித்துக் கொண்டிருந்தார். ஆனால் நாம் அவைகளை தேடிச்சென்று, அற்புதங்களை கொண்டிருக்கவேண்டும் என்றும்; நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது அவ்விதமான காரியத்தை பெற்றிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சியை (evidence) காண்பிக்கும் பொருட்டு... அத்தாட்சிகளை நான் விசுவாசிப்பதில்லை. நாம் தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொண்டிருக்கும்போது, நாம் இரட்சிக்கப்பட்டி ருக்கிறோம் என்ற அத்தாட்சியையே நான் விசுவாசிக்கிறேன். அது சிறப்பானது என்று நான் அறிந்திருக்கிறேன், அதன் பின்னர் கனிகள் பின்தொடரும். 12எனவே, எங்களுடைய ஆப்பிரிக்காவுடனான தொடர்புகள் ஒவ்வொரு மணிநேரமும் அதிகரித்துக் கொண்டே போகும்போது, நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது என்பதற்கான அடையாளத்தை அவர் காண்பிக்குமாறு நான் அவரிடத்தில் கேட்டுக்கொண்டேன். நாங்கள் அந்த பெண்ணுக்கு ஜெபித்தபோது, அவளால் பேசவும், கேட்கவும், நகரவும் முடிந்தது. நம்முடைய தேவன் செய்த காரியத்தை பார்க்கும்போது அது ஆச்சரியமாய் இருக்கிறது. எனவே, அதற்காக இன்றிரவு நாம் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறோம். அவளுடைய அன்பான வீட்டார், அவர்கள் எங்கிருந்தாலும், இன்றிரவு அந்த பெண்ணை பார்க்கும்போது அவர்கள் மிகவும் சந்தோஷமாய் இருப்பார்கள். நரம்புகள் அதினிடத்தின்று முழுவதும் துண்டிக்கப்பட்டு, சரி செய்யக் கூடிய வழியே இல்லாமல் மற்றும் எதுவுமே செய்ய முடியாத பட்சத்தில் அது எப்படி சாத்தியமாயிருக்கும்? நாவு அல்லது குரல்வளை மற்றும் கேட்பதற்கான நரம்பு வெட்டப்பட்டு முழுவதும் துண்டிக்கப்பட்டு இருந்தது; இந்த இரண்டும் ஒரே நரம்புடன் சம்மந்தப்பட்டு இருந்தது, ஆனால் அது விபத்தினால் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவன் ஏதோ ஒரு வழியில்... அந்த பெண் பேசினதை கேட்டவர்கள் எத்தனை பேர் அங்கே இருந்தீர்கள்? அவர்களை நான் இங்கே பார்க்கட்டும். நல்லது. அவளால் பேசவும், கேட்கவும் இன்னும் மற்றவர்களிடத்தில் பேசவும் முடிந்தது. நான் இப்படியாக அவளிடத்தில் பேசினேன். (சகோதரன் பிரான்ஹாம் மெதுவாக பேசுகிறார்) நான், “நான் பேசுவதை உன்னால் கேட்க முடிகிறதா?” என்றேன். “ஆம்” ''நான் பேசுவதை உன்னால் கேட்க முடிகிறதா? மேலும், “அம்மா” என்று சொல், என்றேன். அவள், “அம்மா” என்றாள். நான், “இயேசு” என்று சொல், என்றேன். அவள், “இயேசு”, என்றாள். சரி, நீ புறப்பட்டு சென்று, பேசலாம். 13எனவே தேவன் அருமையானவர், இல்லையா? முழுவதும் இரக்கம் நிறைந்தவர். எனவே, இப்பொழுது இரண்டு வாரமாக சுகமளிக்கும் ஆராதனையில் இருந்ததினால், அது தாமே என்னை மறுபடியுமாக இன்னொரு ஆராதனையை நடத்தும்படிக்கு என்னுடைய இருதயத்தை துள்ளி குதிக்க செய்கிறது. இப்பொழுது, எண்ணாகம் புத்தகத்துக்கு திருப்புவோம், நான் பழைய ஏற்பாட்டை நேசிக்கிறவன். இன்றிரவு எண்ணாகமம்புத்தகத்திலிருந்து ஒரு பாடத்தை பார்க்கப்போகிறோம்; எண்ணாகமம் 13-ம் அதிகாரம், 30-வது வசனம். துவக்கமாகவும் மற்றும் அடிப்படைக்கான பொருளாக ஒரே ஒரு வசனத்தை நாம் படிக்கப் போகிறோம். எனவே, பாருங்கள், நாம் ஒரு வசனத்தை வேதாகமத்திலிருந்து படிக்கும்பட்சத்தில், நான் இந்த ஒரு காரியத்தை அறிந்திருக்கிறேன், அது, என்னுடைய வார்த்தையோ விழுந்துபோகும் ஏனெனில் நான் ஒரு மனிதன்; ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் விழுந்து போகாது காரணம் அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. ஆகவே, இதிலிருந்து படிக்கப்போகிற ஒரு வசனம், அது நமக்கு அஸ்திபாரமாகவும், உள்ளே வருகிற ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதிக்கிறதுமாய் இருக்கிறது, காரணம் நாம் தேவனுடைய வார்த்தையை தவிர வேறொன்றையும் வாசிக்கப்போவதில்லை. இப்பொழுது, நாம் 30-ம் வசனத்தை பார்ப்போம்: அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி, நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். தேவன் தாமே வாசித்த தேவனுடைய வார்த்தையோடு கூட ஆசீர்வாதத்தை கூட்டுவாராக. 14இப்பொழுது, இன்றிரவு என்னுடைய தலைப்பு என்னவெனில்: காதேஸ் - பர்னேயாவில் (At Kadesh barnea). கர்த்தருக்கு சித்தமானால் ஒரு சிறிய பின்னனியை கொண்டிருக்கும் பட்சத்தில், நாம் வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படிக்கு, நாம் பேசப்போகும் இந்த தலைப்பை கருத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் இவையாவும் (பிரசங்கம்) ஏற்கனவே முன் திட்டமிடப்படுவது இல்லை, அது எவ்விதமாக ஏவுதலினால் பேசப்பட்டிருக்கிறதோ, அவ்விதமே அது கொடுக்கப்பட்டிருக்கிறது. எப்படி பிரசங்கிக்க வேண்டும் என்று பள்ளிக்கு சென்று நான் கற்றுக் கொண்டதில்லை. நான் அதை நான்கு அல்லது ஐந்து முறை முயற்சி செய்தேன், ஆனால் அப்படிச் செய்ததினால் அதை உண்மையிலே மோசமாக குழப்பிதான் போட்டேன். அதை எப்படிச் செய்வதென்று எனக்கு தெரியாது. ஆனால் நான் அவரை நேசிக்கிறேன் மற்றும் அவர் மீது சார்ந்தும் இருக்கிறேன். நீங்கள் யாவரும் அவ்விதமே செய்கிறீர்கள் என்று நான் அறிவேன். 15எனவே, ஆதியிலே இந்த ஒரு காட்சியை தேவன்... ஒரு பெரிய வேதாகம நாடகத்தை இங்கே நமக்காக தேவன் அமைத்து வைத்திருக்கிறார், காரணம் இதைக் கொண்டுதான் நாம் செழிப்படைய வேண்டும். எபிரேயர் பத்து அல்லது பன்னிரெண்டாம் அதிகாரம் என்று நான் விசுவாசிக்கிறேன், “மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமா யிருக்கிற கர்த்தராகிய இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு கூட ஓடக்கடவோம்”, என்று கூறுகிறது. 16இப்பொழுது, முழு பழைய ஏற்பாடும், அதின் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய பண்புகள் யாவும் நியாயப்பிரமாணத்தையும் இந்த யுகத்தையும் இணைக்கிற புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் இணைப்புக் கல்லுக்கு (Keystone), முன் நிழலாய் இருக்கிறது. அநேக மக்கள் இதை கிறிஸ்தவ யுகம் என்றும் குறிப்பிடுகிறார்கள், ஆனால் அது அப்படியல்ல. அது பரிசுத்தாவியின் யுகமாக உள்ளது. கிறிஸ்தவ யுகம் மூன்று வருடம் ஆறு மாதங்களுக்கு நிலைத்திருந்தது. ஆனால் நியாயப்பிரமாணமோ அநேக நூற்றாண்டுகளாக நிலைத்திருந்தது. ஆனால், கிறிஸ்தவயுகம், அது தான் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டை இணைத்தது அல்லது இரண்டையும் இணைக்கிற இணைப்புக் கல்லாயிருந்தது. (Keystone) அநேக முறை நாம் வேதாகமத்தில் பார்த்திருக்கிறோம் மற்றும் அது அநேக முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது 'அப்போஸ்தல நடபடிகள்' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நான் அதை எப்பொழுதும் அப்போஸ்தலருக்குள் பரிசுத்த ஆவியின் நடபடிகள்', என்று குறிப்பிடுவது வழக்கம். காரணம் அப்போஸ்தலர்கள் வெறுமனே மனிதர்கள், ஆனால் அப்போஸ்தலர்களுக்குள்ளாக இருந்த பரிசுத்த ஆவியே, அவருடைய அசைவை கொண்டு வந்தார். 17கர்த்தராகிய இயேசு, அவர் போன பிறகு, அவருடைய கிரியையை தொடர்ந்து செய்யும்படிக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவி சபையின் மேலாக இறங்கி வந்தார். இங்கே கிறிஸ்துவானவர் இருந்தபோது, அவர்இருந்ததைக் காட்டிலும், அவர் இல்லாதபோது இருக்கும் கொஞ்ச வெளிச்சத்தில் சுவிசேஷ வெளிச்சத்தை பிரகாசிக்கும்படிக்கு அது கொடுக்கப்படுகிறது. அது சந்திரனும், சூரியனும் போல் இருக்கிறது. சூரியன் இல்லாதபோது அது மறுபடியும் உதிக்கும் வரைக்கும் வெளிச்சத்தை கொடுக்கும்படிக்கு சந்திரன் மேல் எழும்பி வருகிறது. பின்னர் சந்திரன் மறைந்து போகிறது. அதின் பிறகு சூரியன் சந்திரனைக் காட்டிலும் பிரகாசமான வெளிச்சத்தை கொண்டிருக்கிறபடியால் சந்திரனுடைய வெளிச்சத்தை அது அணைத்துப் போடுகிறது. எனவே சந்திர, வெளிச்சம் என்பது என்ன? அது சந்திரன் மேல் விழும் சூரியனுடைய பிரதிபலிப்பாய் இருக்கிறது. அது கிறிஸ்துவைப்போல் இருக்கிறது. அவர் இங்கே இருந்தபோது, அவர் உலகத்துக்கு வெளிச்சமாய் இருந்தார். அவர் போன பிறகு இன்றைக்கு உலகத்துக்கு வெளிச்சத்தை கொடுக்கும்படிக்கு மற்றும் அவர் திரும்பி வரும் வரைக்கும் (மக்கள்) வெளிச்சத்தில் நடக்கும்படிக்கு தன்னுடைய வெளிச்சத்தை பிரதிபலிக்கும்படிக்கு சபையின் மேலாக தன்னுடைய வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்கிறார், அதன் பிறகு எல்லாம் அவரிடத்தில் கொடுக்கப்படும். பின்னர் அவர் தாவீது ராஜாவின் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து என்றென்றைக்கும் அரசாளுவார். 18இப்பொழுது, பழைய ஏற்பாடானது ஒரு அருமையான மாதிரியாய் (Type) இருக்கும் பட்சத்தில், நம்மை அம்மாதிரியோடு ஒப்பிட்டுப் பார்த்து, அம்மக்களுக்கு நடந்த எல்லா சம்பவங்களையும் பார்க்கும்போது, அது நமக்கு எடுத்துக்காட்டாக இருப்பதை நம்மால் காணமுடியும். எனவே, தேவன் தாமே ஏகாதிபதியாக இருக்கும்பட்சத்தில்... மேலும் நான்... இன்று, இரவு - உணவுக்காக அழைக்கப்பட்டிருக்கும் ஒரு வீட்டில் நான் போதித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் தங்களுக்கு பிரியமானவர்களை மறுபடியும் மகிமையில் சந்திக்கும்போது அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியுமா என்று அறிந்து கொள்ள விரும்பினார்கள். “ஆம் நிச்சயமாக நாம் அவர்களை அறிந்து கொள்வோம்”, என்று கூறினேன். பாருங்கள், நாம் வாசம் செய்வதற்கு, நமக்கு மூன்று விதமான சரீரங்கள் இருக்கிறது. ஒன்று மனித சரீரம் (Human); இன்னொன்று பரத்துக்குரிய சரீரம்(celestial); மற்றொன்று மகிமைப்படுத்தப்பட்ட சரீரம் (glorified), எனவே, நாம் இந்த சாவுக்கேதுவான சரீரமாகிய மனித சரீரத்தில் ஒருவரையொருவர் அறிந்திருக்கும்போது, எவ்வளவாக மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் ஒருவரையொருவர் அறிந்திருப்போம்? அது இவ்விதமாக இருக்கிறது, எப்படியெனில் நியாயப் பிரமாணமே ஒரு நல்ல காரியத்தை உற்பத்தி செய்யும்போது, எவ்வளவாக கிருபையானது அதைக் காட்டிலும் பெரிதான காரியத்தை உற்பத்திசெய்ய முடியும், ஏனெனில்அது நியாயப்பிரமாணத்தை காட்டிலும் பெரிதானது. மேலும் சந்திரனால் (நிலவு) ஒரு குறிப்பிட்டபாக வெளிச்சத்தை உற்பத்தி செய்ய முடியுமானால், சூரியன் வரும்போது அதைக்காட்டிலும் அதினால் எவ்வளவாக பிரகாசிக்க முடியும். எனவே நாம் நிச்சயமாக ஒருவரையொருவர் அறிந்திருப்போம். 19எனவே இப்பொழுது, அது நான் அடிக்கடி கூறுவது போல் இருக்கிறது, நாம் அறிவில் (Knowledge) தொடர்ந்து வளர்ந்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் என்ற காரியம் வரும்போது; நாம் சிறு பையனாக அல்லது சிறு பெண்ணாக இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நாம் அதிகமாக அறிந்திருக்கிறோம், காரணம் நாம் ஞானத்தில் வளர்ந்து வருகிறோம். எனவே முழு மனிதவர்கமும் ஞானத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், மிருகங்கள் எல்லாம் ஞானத்தில் ஒருபோதும் வளர்வதில்லை? உங்களுக்கு தெரியுமா உங்கள் பாட்டனார் வசித்த வீட்டைக்காட்டிலும் இப்பொழுது நீங்கள் நல்ல வீட்டில் வசிக்கிறீர்கள்? ஒரு வேளை உங்கள் பிள்ளைகள் இப்பொழுது நீங்கள் வசிக்கிற வீட்டைக் காட்டிலும் மேலான வீட்டில் வசிக்கக்கூடும். 20ஆனால் சமீபத்தில் ரீடர்ஸ் டைஜஸ்ட் அல்லது வேறொன்றில் நான் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர்கள் ஒரு சிறு பாடும் பறவையை (wren) எடுத்து, அது கூடு கட்டுவதற்கான எந்தவொன்றையும் அதின் அருகில் வைக்காமல் அதை ஒரு கூண்டில் அடைத்து வைத்தார்கள். அவள் அந்த கூண்டின் தரையில் தான் முட்டையிட வேண்டியிருந்தது. அவ்விதமாக அவைகள் முட்டையிட்டு குஞ்சுகளை, சிறுபாடும் பறவைகளை, பொரித்தன. அவர்கள் அந்த சிறுபாடும் பறவை குஞ்சுகளை எடுத்து, அவைகள் கூடு கட்டுவதற்கான எந்தவொன்றையும் வைக்காமல், அவைகளை கூட்டில் அடைத்து வைத்தார்கள் அவைகள் தங்களுடைய சுபாவத்தில் மாற்றத்தை பெற்றுக்கொள்கிறதா என்று பார்க்கும்படி அவைகளை பதினைந்து தலைமுறைக்கு குஞ்சு பொரிக்க வைத்து சோதித்து பார்த்தார்கள். எனவே, அதற்கு பதினைந்து வருடங்கள் பிடிக்கும், காரணம் அந்த பாடும் பறவைகள் ஒரு வருடத்திற்கு ஒரு முறைதான் முட்டையிடும். பதினைந்து வருடங்கள் கழித்து, அதாவது கூடு கட்டுவதற்கென்று ஒரு வைக்கோலும் இன்னும் வேறெதுவும் இல்லாமல் பதினைந்து தலைமுறைக்கு பிறகு வந்தபாடும் பறவைகளிலிருந்து இன்னொரு சிறிய பாடும் பறவையை ஓரிடத்தில் கொண்டுபோய் வைத்தார்கள்; முதலாவது அந்த சிறிய பறவை செய்த காரியம் என்னவெனில், அவள் பறந்து சென்று ஒரு கூட்டை(nest) கட்டினாள், அவைகள் ஏதேன் தோட்டத்தில் இருந்தபோது எவ்விதமாக கூட்டை கட்டினதோ அதேவிதமாக இப்பறவைகள் கூட்டை கட்டின. 21ஆனால் மனிதனோ படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறான், படிப்படியாக ஞானத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறான். நான் கூறியிருக்கிறேன், எப்படியெனில் உங்கள் தாத்தா உங்கள் பாட்டியை பார்ப்பதற்கு எருது வண்டியில் (Ox cart) சென்றார். உங்கள் தகப்பனார் உங்கள் தாயாரைப் பார்ப்பதற்கு குதிரை வண்டியில் (horse buggy) சென்றார். நான் என் மனைவியை பார்ப்பதற்கு மாடல் T-ஃ போர்டு காரில் சென்றேன். என்னுடைய பையன் எட்டு சிலிண்டர் பொருத்திய பந்தய கார்வைத்திருக்கிறான். அதை நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. ஒருவேளை நம்முடைய பேரப்பிள்ளைகள் எதிர்காலத்தில் ஒரு ஜெட் விமானத்தை வைத்திருக்கலாம். நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் நம் ஒவ்வொருவருக்கும் ஆத்துமா இருக்கிறது. இப்பொழுது, பறவைக்கோ ஆத்துமா என்பது இல்லை. ஆனால் நமக்கு ஆத்துமா இருக்கிறது. நாம் சிருஷ்டிகர்கள் கிடையாது, ஆனால் நம்மால் காரியங்களை தாறுமாறாக்க முடியும். 22இப்பொழுது, நம்மால் மரத்தை சிருஷ்டிக்க முடியாது, ஆனால் தேவன் உண்டாக்கின மரத்தை எடுத்து நம்மால் ஒரு வீட்டை கட்ட முடியும், ஏனெனில் நாம் அவருடைய வழித்தோன்றலில் வந்து, அவருடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம். என்னதான் நாம் வீழ்ச்சி அடைந்த நிலையிலிருந் தாலும், நாம் இன்னும் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் வீழ்ச்சி அடைந்த நிலையிலிருந் தாலும், நாம் இன்னுமாக தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம். தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வேண்டியவராயிருக்கிறார். ஓ, அதை நீங்கள் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். சபையே, இன்றிரவு, இதை மட்டும் நீங்கள் புரிந்துக்கொண்டு, உணர்ந்து கொள்வீர்களானால், நீங்கள் ஒரு கம்பத் தண்டையிலிரந்து இன்னொரு கம்பத்தண்டைக்கு ஓட மாட்டீர்கள் மற்றும் இந்த சபையிலிருந்து அந்த சபைக்கு மாறிக் கொண்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்கு இன்பத்தை கொண்டு வரும்படிக்கு உலகத்தின் காரியங்களை நாடி ஓடமாட்டீர்கள். ஒரு சுகமளிக்கும் ஆராதனையிலிருந்து இன்னொரு சுகமளிக்கும் ஆராதனையை தேடி ஓடமாட்டீர்கள். நீங்கள் தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக் கொண்டிருக்கும்போது, எல்லாம் முடிந்தது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை செய்திருப்பாரானால், அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதிலிருந்து அவர் கொஞ்சங்கூட விலகிப் போகமாட்டார். அவர் தன்னுடைய வார்த்தையை நிறைவேற்றுவதில் கடமைப்பட்டவராய் இருக்கிறார். 23யாரோ ஒருவர்,“சரி, அவர்கள் பின் வாங்கிப் போய் (Backslide), திரும்பவும்...” கூறினதை கேட்டிருக்கிறேன். “ஆம், நான் தேவனை விட்டு தொலைந்துபோனேன்”, என்று அப்படி நீங்கள் கூறலாம். நீங்கள் அவரோடு கூட இருக்கிறவர்களாக காணப்பட்டால், அவரைவிட்டு நீங்கள் ஒருபோதும் தொலைந்து போகமாட்டீர்கள். காரணம் தேவன் உங்களை இரட்சித்துவிட்டு, அதன் பிறகுநான் உன்னை இரட்சிக்கவில்லை என்று கூறி, உங்களை தள்ளிவிடமாட்டார். அப்படி அவர் செய்வாரானால், அவர் தன்னுடைய சொந்த திட்டத்தையே தோல்வியடைய செய்கிறவராய் இருப்பார். எனவே, அவரால் அப்படி செய்யமுடியாது. 24நாம் படிப்படியாக ஞானமடைகிறோம், ஆனால் தேவனோ முதலிலேயே எல்லையற்றவராய் இருக்கிறார். அவர் பரிபூரணமானவர். அவர் படிப்படியாக ஞானத்தை பெற்றுக்கொள்கிறவர் அல்ல. அவர் எப்பொழுதும் மாறாதவராயிருக்கிறார். எனவே, ஒரு குறிப்பிட்ட நெருக்கடி எழும்பும்போது, தேவன் அந்த நெருக்கடியில் இன்ன - இன்ன வழியில் நடந்து கொண்டு, மறுபடியும் அதே விதமான நெருக்கடி எழும்பும்போது அவ்விதமே அவர் மறுபடியும் நடந்துக்கொள்ளவில்லையென்றால், அவர் இங்கே நடந்து கொண்டது தவறாக நடந்து கொண்டதாகிவிடும். பாருங்கள். எனவே, எந்த காலமாயினும், அவர் எல்லா நேரத்திலும் மாறாதவராய் இருக்கவேண்டும். எப்படியாக மக்கள் அதற்கு விளக்கம்கொடுத்து, தேவத்துவத்தின் வல்லமையை எடுத்துப்போட முயற்சிக்கிறார்கள், என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கும்போது அவருடைய வல்லமை மாறாததாயிருக்கும், அவருடைய மனப்பான்மை மாறாததாயிருக்கும். அவர் நேற்று எப்படி இருந்தாரோ அவ்விதமாக இப்பொழுதும் எப்பொழுதும் இருப்பார். அவரிடத்திலிருந்து, நீங்கள் ஒன்றையும் எடுக்கமுடியாது. அவ்வளவுதான். எனவே அவர் தன்னுடைய பூமிக்குரிய பிரயாணத்தில் இருக்கும்போது மரித்து உயிர்தெழுந்து, மருத்துவர்களால் கைவிடப்பட்ட வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார். எனவே அந்த நெருக்கடியில் அவர்களை அவர் சுகப்படுத்தி அவ்விதமாக நடந்து கொண்டிருப்பாரானால்; மற்றும் அந்த நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருப்பாரானால், அவர் இன்றைக்கும் அவ்விதமாகவே நடந்துக்கொள்ள வேண்டும், இல்லாத பட்சத்தில் அவர் மக்களுக்கு தவறிழைத்தவராக ஆகிவிடுவார். பாருங்கள். அங்கே அவர் ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்து, அதினோடு அவர் தரித்திருப்பாரானால், இங்கே அவர் ஒரு வாக்குத்தத்தத்தை கொடுக்கும்போது, இதனோடும் அவர் தரித்திருக்கவேண்டும். நிச்சயம் அவர் அவ்விதமாக செய்தாக வேண்டும். தேவனிடத்திலும், அவருடைய வாக்குத்தத்தத்திலும் எந்த ஒரு தவறும் இல்லை. தவறு நம்மிடத்தில் தான் இருக்கிறது; அதை நம்பக்கூடிய விசுவாசமோ அல்லது அவரை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளக் கூடிய காரியமோ நம்மிடத்தில் இல்லை . 25எனவே, கவனியுங்கள், நாம் பறவைகளுக்கான அறிவுக் கூர்மையை (Gumption) பெற்றிருப்போமா னால், அவைகள் துவக்கத்தில் எவ்விதமாய் நடந்துக்கொண்டதோ அவ்விதமாய் நாமும் நடந்து கொள்வோம். ஆனால் நாமோ மிகவும் அறிவாளிகளைப் போல் நடந்துகொண்டு, முழு உலகத்தையே நாம் அறிந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு,“ஓ, அது அப்பொழுது ஒரு நாளில் அவ்விதமாய் இருந்தது, என்று கூறுகிறோம், மேலும் நாம் இன்னொரு வகையான சூழலை ஏற்படுத்திக் கொள்கிறோம். தேவனுடைய வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, வெறுமனே ஒரு புதிய அமைப்பை துவங்குகிறோம், பாருங்கள். 'நல்லது, இந்த வழியில்தான் அதை செய்வார்', என்று கூறுகிறோம். நாம் மட்டும் பறவைகளைப்போல் மாறாமல் சுயாதீன அடிப்படையில் தெரிந்து கொள்ளாமல் (freemoral agency) தேவனை அவருடைய வார்த்தையில் மட்டும் ஏற்றுக்கொள்வோமானால், அது காரியத்தை முடித்துவைக்கும், அவ்வளவுதான். தேவன் அவ்விதமாய் கூறியிருக்கிறார். எனவே அதைக் குறித்ததான எந்த ஒரு தடையுமில்லை. உண்மையுள்ள, ஜீவனோடுள்ள தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார் என்று அறிந்து கொள்வதென்பது எவ்வளவு அருமையானதாய் இருக்கிறது. எல்லா குழப்பத்திற்கு மத்தியிலும் தேவன் ஜீவித்து, அரசாளுகிறார். 26இங்கே எகிப்திலிருக்கும் இஸ்ரவேலாகிய இந்த உடன்படிக்கையின் மக்கள், அவர்களுடைய சகோதரனாகிய யோசேப்பைவிற்று கீழ்படியாமை யினிமித்தம் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நானூறுவருடங்கள் அடிமைத்தனத்திலி ருந்தார்கள். நீங்கள் இதை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அவர்கள் தங்களுடைய உடன்படிக்கையை ஒருபோதும் இழந்து போகவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய சுதந்திரத்தைதான் இழந்தார்களேயன்றி, தங்களுடைய உடன்படிக்கையை அல்ல. ஆபிரகாமையும் பிறகு அவனுடைய வித்தையும் இரட்சித்துக்கொள்வேன் என்று தன் மேல் அவர்ஆணையிட்டு, ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபினிடத்தில் தேவன் உடன்படிக்கை பண்ணியிருக்கும்போது, நிச்சயம் அவர் அந்த வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறார். ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் அவர் எவ்வளவு கடமைப்பட்டி ருக்கிறாரோ, அவ்விதமே அவர் உனக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதிலும் அதே விதமாய் கடமைப்பட்டிருக்கிறார். நீங்கள் ஆபிரகாமின் வித்தாய் இருக்கும்பட்சத்தில், அவ்விதமாய் நடக்கும். நீங்கள் எப்படி ஆபிரகாமின் வித்தாய் ஆகிறீர்கள்? வேதாகமம், “கிறிஸ்துவுக்குள் மரித்த நாம், ஆபிரகாமின் வித்தை ஏற்றுக்கொண்டு, வாக்குத்தத் தத்தின்படி சுதந்திரவாளியாகிறோம்”, என்று கூறுகிறது. அப்படியானால் ஆபிரகாமுக்கு எவ்வளவாய் அவர் கடமைப்பட்டிருக்கிறாரோ அதேவிதமாக உனக்கும் அவர் கடமைப்பட்டிருக் கிறார். சொல்லப்போனால், அதுதாமே நம்மிடத்திலிருந்து எல்லா பயத்தையும் எடுத்துப் போடுகிறது. நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதவர்களாய் இருந்து, உங்களுக்கு அவர் என்ன கூறியிருக்கிறாரோ அதின்மேல் முற்றிலும் இளைப்பாறினவர்களாய் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். 27இன்றைக்கு நாம் ஜீவிக்கிற இந்த மணிவேளைக்கு எதிராக சவால்விடுகிற (challenge) ஒரு மனிதன் நமக்கு அவசியமாயிருக்கிறது. அது சரிதான். முரண்பாடா னதும் மற்றும் அது போன்ற ஒவ்வொரு காரியங்களும், மார்க்கம் என்ற பெயரில் மற்றும் இரட்சிப்பு, சுவிசேஷம் இன்னும் அது போன்ற காரியங்கள் பெயரில் உள்ளே நுழைகின்ற இந்நாளில் நம்மத்தியிலிருந்து, யாராவது ஒருவர், அந்த நாளில் அப்பொழுது நிலவின் சவாலை சந்திக்கும்படிக்கு தேவன் மோசேயை எழுப்பினது போல் எழுப்பப்படவேண்டும். 28ஆம் அவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை இழந்தார்களேயன்றி, தங்களுடைய உடன்படிக் கையை இழக்கவில்லை . அவர்கள் அடிமைகளா னார்கள். ஆகிலும் அவர்களது உடன்படிக்கை நிலைத்திருந்தது. அங்கே ஒரு நாளில், எகிப்தின் ஆளோட்டிகளின் (taskmasters) கீழாக அவர்கள் வலியினால் முனகிக்கொண்டும், அழுதுகொண்டும் இருந்தார்கள், காரணம் அவர்கள், அவர்களுக்கு கீழாக அடிமையாகி இருந்தார்கள். இங்கே இந்த அழகான காட்சியை நீங்கள் கவனிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது நியாயபிரமாணிகளுக்கு (legalists) பிரயோஜனமாய் இருக்கும். கவனியுங்கள். தேவன் கீழே இறங்கி வந்து, “இப்பொழுது, நீங்கள் குறிப்பிட்ட காரியங்களை செய்வீர்களானால், நீங்கள் குறிப்பிட்ட காரியங்களை செய்வீர்களானால்”, என்று கூறவில்லை. ஆனால் தேவனுடைய கிருபை, மோசே என்ற இரட்சகரை அருளினது. அதுசரி. வேறு எந்த நிபந்தனையின் கீழாகவும் மோசே அனுப்பப்பட வில்லை, ஆனால் தன்னுடைய ஏகாதிபத்திய கிருபையினால் தேவன் மோசேயை அருளினார். அது ஒரு இரட்சகரைமட்டும் (savior) அருளாமல், எந்த ஒரு பிரமாணமுமின்றி, எந்த ஒரு நிபந்தனையுமின்றி, கிருபை ஒரு விடுவிக்கிறவரையும் (deliverer) அவர்களுக்கு அருளினது. அது வெறுமனே தேவனுடைய கிருபையேயன்றி வேறொன்று மில்லை. அவர்களை அவர் வெளியே கொண்டுவரும் படிக்கு, அவர் மோசேயை (இஸ்ரேல்) தேசத்துக்கான விடுவிக்கிறவராகவும், இரட்சகராகவும் இருக்கும் படிக்கு கீழே அனுப்பினார். 29அதை நான் நினைக்கும்போது, எகிப்தில் உடன்படிக்கை மக்களோடு இருந்த அதே தேவன், நிச்சயமாக, இன்றிரவு சபை இருக்கும் அதே மெத்தனம் மற்றும் அழுத்தத்தின் கீழாக இருக்கிறார் என்று நான் நினைக்க துவங்குகிறேன். தன்னுடைய சொந்த கிருபையினால், வேறொருவருடையது அல்ல, அவர் ஒரு விடுவிக்கிறவரை அனுப்புவார். நாம் இன்றிரவு இந்த சபையில் உட்கார்ந்திருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியின் பொழிதலை நாம் பெற்றுக்கொள்வோம். அவர்களுடைய எந்த பிரயாசத்தின் அடிப்படையின் மேலும் தேவன் செயல்படாமல், இந்த உடன்படிக்கை மக்களோடு இடைபட்டார். எப்படியெனில், அவர் தம்முடைய உடன்படிக்கையின் மக்களுக்கு பரலோகத்திலிருந்து இலவசமாக ஓர் கிருபையின் செய்கையை தன்னுடைய வாக்குத்தத்தத்தின் இராஜாதிபத்திய அதிகாரத்தின் அடிப்படையின் மேல் அனுப்பினார். அவர் மோசேயை அனுப்பினார். எனவே மக்கள் அடிமைத்தனத்துக்குள் சென்று ; பாவம், வியாதி, தொல்லை மற்றும் இன்னும் அநேகவிதமான காரியத்தின் நுகத்தில், அதாவது அதேவிதமான நெருக்கடியில் இன்றைக்கு இருக்கும்போது, முதல் தடவை அவர் மோசேயை அனுப்பினது போல இரண்டாவது முறை அவ்வளவு நிச்சயமாக அவர் இயேசு கிறிஸ்துவை அனுப்புவார். எனவே நெருக்கடி எழும்பினபோது, தேவன் தன்னுடைய இராஜாதிபத்திய கிருபையின் அடிப்படை மேல் அவர் கிரியை செய்தார். எனவே அதே சட்ட திட்டத்தின் கீழ், அதே காரியத்தை அவர் செய்தாக வேண்டும் இல்லாத பட்சத்தில் அப்பொழுது அங்கே அவர் செய்தது அவரை தவறு செய்ததாக ஆக்கிவிடும். அதை நீங்கள் புரிந்துக் கொண்டீர்களா? 30நான் எதை சொல்ல முயற்சிக்கிறேன் என்றால் : இன்றைக்கு சபையில் நான் கண்ட மிகவும் பெரிய பாவம் என்னவெனில் அது அவிசுவாசமாகும். இருப்பதிலேயே அது ஒன்றுதான் பாவமாயிருக்கிறது. அவிசுவாசத்தை தவிர வேறொன்றும் பாவமில்லை . அங்கே வெளியே இரவு எந்த அளவுக்கு இருக்கிறது? அங்கே இருள் எந்த அளவுக்கு இருக்கிறது? என்னுடைய கரங்களிலிருந்து, “இந்த அளவு இருள் தான்”, போகிறது என்று உங்களால் கூறமுடியாது. ஏனென்றால் அது முழுவதும் இருளாயிருக்கிறது. எனவே ஒரே ஒரு வழியில் மட்டுமே நீங்கள் பாவம் (sin) என்னவென்பதை அடையாளம் கண்டுகொள்ளவோ, தீர்மானிக்கவோ முடியும், அது நீங்கள் குடிப்பதினாலோ, புகை பிடிப்பதினாலோ, சூதாட்டம் விளையாடுவதினாலோ அல்ல. அது இந்த வழியில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது; எப்படியெனில் நீங்கள் அவிசுவாசியாய் இருப்பதினால் அதை நீங்கள் செய்கிறீர்கள். அது உண்மை . நீங்கள் சூதாட்டம் விளையாடுவதினாலோ, நீங்கள் பொய் பேசுவதினாலோ, நீங்கள் திருடுவதினாலோ, அப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் பாவம் கிடையாது, அவையாவும் பாவத்தின் விளைவினால் வருகிறது. அதற்கு காரணம் உனக்குள் வேறுவிதமான ஒரு ஆவி வாசம் செய்கிறதாய் இருக்கிறது. ஆனால் நீங்கள் விசுவாசியாய், ஒரு திடமான விசுவாசியாய் இருக்கும் பட்சத்தில், அவ்விதமான காரியங்கள் உங்களுக்கு அவ்வளவு மரித்ததாயும் மற்றும் உனக்கு முன்பாக இருக்கும் இரவின் காரிருளைப் போல் இருக்கும். நிச்சயமாக. பாருங்கள். அவ்விதமான காரியங்கள் யாவும் அவிசுவாசத்தின் தன்மைகளாய் இருக்கிறது. 31பரிசுத்த யோவான் 3-ம் அதிகாரத்தில் இயேசு,“விசுவாசியாதவன் எவனோ அவன் ஏற்கனவே ஆக்கினைக்குட்பட்டிருக்கிறான்”, என்று கூறியுள்ளார். நீங்கள் இன்னும் முதலாவது அடிப்படைக்கு வரவில்லை ; நீங்கள் துவக்கத்திலேயே ஆக்கினைக்குட்பட்டிருக்கிறீர்கள். எனவே, அதற்காக நீங்கள் சபையில், இன்ன இன்னப்படி ஜீவிக்க வேண்டும் என்று கோட்பாடுகளை வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் இதை செய்யும் பட்சத்தில், நீங்கள் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிடிப்பீர்களானால், நீங்கள் அந்த சட்டத்தை கடைப்பிடிப்பீர்களானால், ஒரு சபையில் சேர்ந்துக் கொண்டு இருப்பதற்காக, அநேக சமயங்களில் மக்கள் அப்படிப்பட்ட சிறிய காரியங்களை விட்டு விடுவார்கள், இருப்பினும் அந்த காரியம் அவர்களுடைய இருதயத்தில் இன்னுமாக இருந்து கொண்டுதான் இருக்கும், எனவே அவர்கள் நழுவிச் சென்று, அதை செய்வார்கள். ஆனால் அதே சமயத்தில் ஒரு மனிதன் தேவனுடைய தேவைகளை சந்தித்து, மறுபடியும் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானென்றால், அப்படிப்பட்ட காரியங்கள் அவனுடைய வாழ்க்கையில் இருந்து நீக்கப்பட்டி ருக்கிறது. அதை அவன் செய்ய விரும்பமாட்டான். 32நீங்கள் ஒரு பன்றியை கற்பனை செய்து பாருங்கள்: அந்த பன்றி குப்பைமேட்டுக்குச் சென்று, அங்கிருப்பவைகளை அவன் சாப்பிடுவான். நான் அவனை குறை கூறவில்லை, அவன் ஒரு பன்றியாய் இருக்கிறான். அதுதான் அவனை அப்படி செய்யும்படிக்குச் செய்கிறது. ஆனால் நீங்கள் ஒரு செம்மறியாட்டை அப்படி செய்யும்படிக்குச் செய்ய முடியாது. காரணம் அங்கே இரண்டு சுபாவம் இருக்கிறது; பன்றிக்கு ஒரு சுபாவம் இருக்கிறது; செம்மறியாட்டுக்கு இன்னொரு சுபாவம் இருக்கிறது. எனவே அதே சுபாவத்தை அந்த பன்றிக்குள், அதே சுபாவத்தை நீங்கள் வைத்திருக்கும் வரை, அவனை நீங்கள் எவ்வளவுதான் சுத்தம் செய்ய வேண்டும் என்று முயற்சித்தாலும், அவன் அதே சுபாவத்தைத்தான் பெற்றிருப்பான், காரணம்அவன் துவக்கத்திலேயே ஒரு பன்றியாயிருக்கிறான். எனவே, மக்கள் இரட்சிக்கப்பட்டே இருக்கமாட்டார்கள், ஆனால் அநேக முறை, நாம் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து, சபையில் சேர்த்து இன்னும் அது போன்ற காரியங்களைச் செய்து, அவர்களை உறுப்பினர்களாக ஆக்குகிறோம். அந்த காரணத்தினால் தான் இன்றைக்கு மக்கள் மத்தியில் அப்பேற்பட்ட ஒரு குழப்பம் நிலவுகிறது. அவர்களுக்கு எந்த வழியாக திரும்ப வேண்டும் என்று தெரியவில்லை. தாங்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு, அதே சமயத்தில் உலகத்திலிருந்து கொஞ்சம் கூட வித்தியாசப்பட்டிராத மக்களை, அவர்கள் பார்க்கிறார்கள். அதற்கு காரணம் ஒரு நபர் (அவரை சந்திக்காமலும் அல்லது மறுபடியும் பிறக்காமலும், கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும், அவரை விசுவாசிக்காமலிருப்பதே. அவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கும் படிக்குபழக்குவிக்கப்பட் டிருக்கலாம்; அவர்கள் நடனமாடியிருக்கலாம். அவர்கள் கூச்சலிட்டிருக்கலாம், அவர்கள் பாஷைகளில் பேசியிருக்கலாம்; அவர்கள் இந்த எல்லா காரியங்களையும் செய்திருக்கலாம், ஆனால் அவர்கள் கிறிஸ்து இயேசுவாகிய நபரிடத்தில் வராமலும், மறுபடியும் அவர்களுடைய இருதயத்தில் பிறவாதவர்களாய் இருக்கிறார்கள். இவ்விதமான காரியங்கள் மரிக்கும்போது மட்டுமே நம்முடைய சுபாவம் மாற்றப்பட்டு, ஒரு புதிய நபர் பிறக்கிறான். 33எனவே மோசே விவரம் அறியக் கூடியவயது வந்தவுடன், பார்வோன் குமாரத்தியின் மகன் என்று அழைக்கப்படுவதை அவன் நிராகரித்தான். அதற்கு பிறகு அவன் அந்த எகிப்தியனை கொன்று போட்டான். ஆனால் மீதியானில் தேவன் மோசேயோடேயிருந்து, அங்கிருந்து அவனை திரும்ப அழைத்து வந்தார். ஒரு நாள் அந்த எரிகிற புதரை அவன் சந்தித்தபோது, அவன் எவ்வளவு நாள் ஜீவனோடிருந்தானோ அவ்வளவு நாள் வரைக்கும் அவனோடு தரித்திருக்கக் கூடிய ஒரு அனுபவத்தை அவன் பெற்றுக்கொண்டான். நேற்றைய இரவு நான் கூறின விதமாக அதையே இன்றைக்கு நான் கூறட்டும். எவ்வளவுதான் மோசே நன்றாக போதிக்கப்பட்டிருந்தாலும்; எவ்வளவுதான் வேதசாஸ்திரத்தைபடித்திருந்தாலும், எவ்வளவுதான் அவன் ஒரு நல்ல சபை அங்கத்தினனாக இருந்திருந் தாலும், (அவன் ஒரு நல்ல ஆசிரியரை பெற்றிருந் தான், அது அவனுடைய தாய்), அவன் எந்த அளவுக்கு கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கு கல்வியின் ஒவ்வொரு பிரமாணத்தின் கீழ் அவன் கொண்டுவரப்பட்டிருந்தாலும், அவன் ஒரு இராஜாவினுடைய குமாரனாயிருந்தாலும் அது காரியமல்ல. இருப்பினும், இன்னுமாக அவன் தனக்குதானே முயற்சி செய்து, அதை அவன் சாதிக்க முடியாமல் போனான். ஆனால் ஐந்தே நிமிடத்தில் எரிகிற புதரின் பிரசன்னத்தில், அவன் ஒரு புதிய மனுஷனாக மாற்றப்பட்டான். ஏதோ காரியம் அவனுக்கு நிகழ்ந்தது. 34இன்றைக்கு நம்முடைய வேதபாட சாலைகளில் (Seminaries) எது தேவையென்றால், அதிகப்படியான வேதசாஸ்திரம் கற்பிக்கப்பட வேண்டும் என்றில்லை, ஆனால் மனிதன் தேவனுக்கு முன்பாக வந்து, அவரை முகமுகமாய் தரிசிக்கக்கூடிய எரிகிற புதர் (burning bush) அனுபவமே நமக்கு தேவைப்படுகிறதாயி ருக்கிறது. அந்நாளில் இருந்தது போல, இன்றைக்கு நமக்கு ஒரு சவால்விடுகிற (challenger) நபர் தேவையாயிருக்கிறது. மேலும் தேவனை சந்தித்து, தாங்கள் பேசுகிறது என்னவென்று அறிந்திருக்கிற புருஷர்களும், ஸ்திரீகளும் நமக்கு தேவையாயி ருக்கிறது. ஏதோ சபை புத்தகத்திலிருந்து அல்லது ஏதோ தன் விருப்புரிமை வேதசாஸ்திரத்திலிருந்து (opentheology) எடுத்து போதிக்கக்கூடிய யாரோ ஒருவர் நமக்கு தேவையில்லை. இன்றைக்கு நமக்கு , எரிகிற புதரின் பிரசன்னத்தில் வீற்றிருந்து, மறுபடியும் பிறந்து, ஒரு புதிய சிருஷ்டியாக மாற்றப்பட்ட ஒரு மனிதன் நமக்கு தேவையாயிருக்கிறது. அப்படிப்பட்டஒரு நபர்தான் இன்றைக்கு நமக்கு தேவையாயிருக்கிறது. அப்படிப்பட்ட நபர் தான் எதுவந்தாலும் அல்லது எது போனாலும் யுத்த களத்தில் முன்னணியில் நிற்பான். 35மோசே அவன் கட்டளையை பெற்ற பிறகு, எகிப்திற்குச் சென்று, இஸ்ரவேல் பிள்ளைகளை விடுவித்தான். நாம் கண்டுபிடித்த ஒரு மிகப்பெரிய தவறு, ஒரு மிகப்பெரிய காரியம், அது, அந்நாளில் அது இருந்தது போல், இன்றைக்கும் அவ்விதமே இருக்கிறது. மோசே எகிப்திற்கு சென்று, இஸ்ரவேல் பிள்ளைகளை ஒன்றுசேர்த்து, வெளியே கொண்டு வந்தவர்களை நாம் அறிந்துக்கொண்டபோது, இந்த தனிச் சிறப்பு வாய்ந்த காரியம் நிகழ்ந்தது. அந்த காரியம் இதுதான். நான் உங்களை புண்படுத்த விரும்பவில்லை. நான் உங்களை அசைத்தோ அல்லது குலுக்கியோ உங்கள் தோலை (hide) உரிக்க விரும்பவில்லை , ஆனால் நான் சத்தியத்தையே (truth) பிரசங்கிக்க விரும்புகிறேன். அதைக் குறித்து ஒரு காரியம் இருக்கிறது, சகோதரனே, அதென்னவெனில், சத்தியம் ஒருபோதும் உங்களை பிரபலமாக்காது. (popular); ஆனால் சத்தியம் உங்களை உத்தமனாக (honest) ஆக்கும், அது ஒரு நல்ல காரியம். எனவே நீங்கள் பிரபலமானவராய் இருப்பதைக் காட்டிலும் உத்தமனாக இருங்கள். நிச்சயமாக உங்களால் முடியும். 36எனவே, அந்ததனிச் சிறப்பு வாய்ந்த காரியம் நிகழ்ந்தபோது, அற்புதங்களும், அடையாளங்களும் மற்றும் அதிசயங்களும் நிகழ்த்தப்பட்டதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் வெளியே வந்தவுடன் அவர்களோடு கலப்பின கூட்டத்தாரும் (mixed multitude) புறப்பட்டுப்போனார்கள்“ என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு கலப்பின கூட்ட மக்கள். அதில் சில விசுவாசிகள் இருந்தார்கள். சிலர் விசுவாசிக்கிற மாதிரி நடிக்கிற வர்கள் இருந்தார்கள். மகத்தான அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன; மக்களும் தங்களை விசுவாசிகள் என்று கூறிக்கொண்டு வெளியே புறப்பட்டுச் சென்றார்கள், ஆனால் அவர்கள் விசுவாசிகளே கிடையாது. இன்றைக்கு நம்முடைய பிரச்சனையின் மிகப்பெரிய காரணம் அங்கு தான் இருக்கிறது; நம்மால் அதை சரியாக இணங்கண்டுகொள்ள முடியும். புருஷர்களும், ஸ்திரீகளும் சபைக்குள் வந்து, தங்களை விசுவாசிகள் என்றுகூறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் விசுவாசிகளே கிடையாது. அதை நான் பிரசங்கபீடத்தில் கண்டுபிடித்திருக்கிறேன். அதை நான் ஜெப வரிசையில் கண்டுபிடித்திருக்கிறேன். அதை நான் எங்கும் கண்டுபிடித்திருக்கிறேன். இவ்விடங்களில் புருஷர்களும், ஸ்திரீகளும் வந்து, ”நான் ஒரு விசுவாசி“,என்று கூறிக்கொண்டு, விசுவாசிகளைப் போல் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் விசுவாசிகளே கிடையாது. 37அவர்கள் ஓரிடத்திற்கு வந்தபோது, இந்த மக்களும் தங்களோடு கூட புறப்பட்டு வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தவுடன், அங்கே தான் இஸ்ரவேலுக்கு பிரச்சனையே துவங்கினது. நிச்சயமாக, இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்கள் நடந்தன. அதைத்தான் இன்றைக்கு நம்முடைய நிஜ வாழ்க்கையிலும், நம்முடைய சபைகளிலும் பார்க்கிறோம். தேவன் காட்சியில் வந்திருக்கிறார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறார்; அவர் மரித்தோரை உயிரோடு எழுப்பியிருக்கிறார்; அவர் குருடருடைய கண்களை திறந்திருக்கிறார்; அவர் செவிடருடைய காதுகளை கேட்கும்படிக்கும்; ஊமையரை பேசும்படிக்கும் செய்கிறார்; அவர் முடவர்களை சுகப்படுத்துகிறார்; அவர் மக்களிடத்திலிருந்து புற்றுநோய்களை எடுத்து போடுகிறார். அது மறுக்கப்படவே முடியாது. அது ஆயிரக்கணக்கில் இருக்கிறது. அது ஒருமுறை இங்கே இருக்கும் எட்டாவது, பென் தெருவில் (Eighth and penn street) துவங்கி, இப்பொழுது உலகை சுற்றிலும் இருக்கும் ஒவ்வொரு அஞ்ஞான தேசத்தில் இருக்கும் குன்றுகளிலும் மற்றும் எவ்விடத்திலும் பத்தாயிரம் கணக்கில் எழுப்புதல் அக்கினிகளாக சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அடையாளங்களும், அற்புதங்களும் நிறைவேற்றப்பட்டு, மகத்தான காரியங்கள் தொடர்ந்துபோய்க் கொண்டிருக்கிறது. தேவனும் அசைவாடிக் கொண்டிருக்கிறார். நாம் சந்திப்பின் நேரமாகிய, முடிவின் நேரத்தில் இருக்கிறோம். 38ஆனால் நாம் கண்டுபிடித்தது என்னவெனில், இதினோடு கூட ஒரு பலதரப்பட்ட கூட்டத்தாரும் சென்றார்கள். அநேக தடவை மக்கள் வெளியே புறப்பட்டுச் சென்று, “ஆம், நான் தான், நான் இதை செய்வேன்”, என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மக்கள் மாம்சத்துக்குரியவர்கள் (Carnal) என்று அறிந்துகொள்ள முடிகிறது. முதலில் கொஞ்சம் அழுத்தம் (strain) அவர்களுக்கு வந்த மாத்திரத்தில், அவர்கள் எகிப்துக்கு திரும்பிபோக வேண்டும் என்று வாஞ்சித்தார்கள், அவர்கள் பூண்டு - மேலெடுகளை (garlic Pops) விரும்பினார்கள். அவர்கள் ஆற்றிலிருந்து பிடித்துவரப்பட்ட மீனை சாப்பிட விரும்பினார்கள், அவர்கள் ஒருவகை வெங்காயத்தையும், பூண்டையும் விரும்பினார்கள், அவர்கள் என்னென்ன காரியங்களை எகிப்தில் கொண்டிருந்தார்களோ அவையெல்லா வற்றின் மேலும் நாட்டம் கொண்டார்கள். அது இன்றைக்கு இருக்கும் மாம்சத்துக்குரிய சபை அங்கத்தினனுக்கு ஒருஅருமையான, நேர்த்தியான மாதிரியாய் இருக்கிறது. அவன் உலகத்துக்குரிய காரியங்களை நேசிக்கிறான், ஏனெனில் அவன் தேவனால் உண்டானவன் அல்ல, வேதாகமமும், “நீங்கள் உலகத்தையும், அதினுடைய காரியங்களையும் நேசிப்பீர்களானால், தேவனுடைய அன்பு உனக்குள் இல்லவே இல்லை” என்று கூறகிறது. கிறிஸ்து தன்னுடைய எல்லா கூற்றிலும் (statements) சரியானவராயிருக்கிறார். அது உண்மை. நாம் அறிந்து கொள்வது என்னவெனில், அது இன்றைக்கு மக்கள் வெளியே சென்று ஓ, எவ்விதத்திலாவது, தேவன் இதை மக்களுடைய இடதுபக்கத்தில் வைத்து, ஐந்தாவது விலா எலும்பின் கீழ் ஆழமாக பதியச் செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதன், அவன் எவ்வளவுதான் ஒரு கிறிஸ்தவனைப் போல நடிக்க முயற்சித்தாலும், அழுத்தம் என்ற காரியம் வரும்போது, அந்த மனிதன் தன்னுடைய மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான பண்புகளை, அழுத்தத்தின் கீழாக இருக்கும்போது வெளிக்காண்பிப்பான். சில சமயம் ஒரு கிறிஸ்தவனை, ஓர் அழுத்தத்தின் கீழ் வைத்து, அவன் எப்படி நடந்துக்கொள்கிறான் என்று பாருங்கள், அப்பொழுது உங்களால் அவன் எதினால் உருவாக்கப்பட்டிருக்கிறான் என்று கூற முடியும். 39பரிசுத்த ஆவி சபையார் மேல் இறங்கும்போது, ஒவ்வொருவரும் நன்றாக உணரலாம்; ஒவ்வொருவரும் கர்த்தரை துதிக்கலாம். ஆனால் தொல்லை ஏற்படட்டும், அப்பொழுது பாருங்கள் என்ன நடக்கிறதென்று. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். நீங்கள் உங்கள் நிலையிலிருந்து விழப்போகிறீர்களா? நீங்கள் கலப்பின கூட்டத்தாரில் ஒருவராக இருக்கிறீர்களா? நீங்கள் அதை சந்திக்க பயப்படுகிறீர்களா? அது தான் காரியம். உங்களால் அதற்கு தாக்கு பிடித்து நிற்ககூடாமல் போகிறது. சகோதரனே, நீங்கள் அவ்விதமாய் இருந்து, பின்வாங்கிப்போய், மேலும் கீழுமாகவும் மற்றும் உள்ளேயும் வெளியேயுமாய் இருக்கும் பட்சத்தில் ஏன் நீங்கள் கல்வாரியண்டை வந்து, உங்களுடைய சுயத்துக்கு மரித்து, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவராய் இருக்கக்கூடாது? ஆமென். உங்களுக்குத்தான் வெட்கக்கேடு. கிறிஸ்தவத்தை உரிமை கோருகிறவர்களே உங்களுடைய சபைகளில் ஜீவிக்கிற நீங்கள்... நாங்கள் இங்கே சபை உறுப்பினர்களை சேர்க்கவில்லை, நீங்கள் இங்கே இருக்கிற வண்ணமாகவர வேண்டியதுதான், நீங்கள் வெவ்வேறு சபையை சேர்ந்தவர்களாயிருக்கிறீர்கள். ஆனால் கிறிஸ்த வர்கள் என்று கூறிக்கொள்கிற மக்களே, நீங்கள் வேறு விதமான, எப்படியெனில், நீங்கள் கூறிக்கொள்கிற ஜீவியத்தை ஜீவிக்காமல் வேறுவிதமான ஜீவியத்தை ஜீவிக்கிறீர்கள், அதினால் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமுதாயத்துக்கு கெடுதல் செய்கிறவர்களாக இருப்பீர்கள். ஆமென். தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு, அவரை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளவும், அநேகமுறை அவருடைய வல்லமை மற்றும் மகிமைக்கு சாட்சி பகர்வதற்கும் வெட்கப்படுகிறீர்களே; அப்படிப்பட்ட நீங்கள் அவருடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு கெட்டப் பெயரை கொண்டு வருகிறவர்களாய் இருக்கிறீர்கள். ஆமென். அது உண்மைதான். அது சரிதான். தேவனுடைய வார்த்தைக்காக நில்லுங்கள், அமிழ்ந்து போகிறீர்களோ அல்லது மூழ்குகிறீர்களோ (sink or drown). தேவனுடைய வார்த்தையின் மேல் நில்லுங்கள். 40ஆபிரகாம் அதை செய்ய வேண்டியதாய் இருந்தது, இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைத்து, அவன் தேவனை விசுவாசித்தான்; அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. இன்றைக்கு நமக்கு என்ன தேவைப்படுகிறதென்றால், சத்தியத்தை வாஞ்சிக்கிற கிறிஸ்தவமே. அது அருகில் இருக்கிறது. நமக்கு தேவைப்படுகிற காரியம் என்னவெனில், அது கஷ்டம் வருவதை கண்டு அதிலிருந்து நழுவிபோகாமலும், தன்னுடைய நிலையிலிருந்து விழாமலும், வேறு வழியாக தப்பித்து ஓடாமலும், அதை சந்திக்கக்கூடிய சில மறுபடியும் பிறந்த கிறிஸ்தவ புருஷர்களும், ஸ்திரீகளுமே; ஆம் அதை எதிர்த்து நின்று, தங்களுடைய நிலையை காண்பிக்கும் புருஷனும், ஸ்திரீயுமே. நீங்கள் அவ்விதமாய் செய்யும் பட்சத்தில், உங்களுடைய நண்பர்களும் அதை மெச்சிக்கொள்வார்கள். ஒரு ஸ்திரீயை மெச்சிக்கொள்ளாதவன், அவன் எப்படிப்பட்ட மனிதனாயிருப்பான்... தலைப்பிரட்டை தாறுமாறாக ஒட்டிக்கொண்டு, சேற்று மண்ணினால் கட்டப்பட்ட தடுப்பு சுவரைப்போல் அவ்வளவு அசிங்கமாக அவள் இருக்கட்டும்; அவள் எவ்வளவு அசிங்கமாக இருந்தாலும் இருக்கட்டும்; ஆனால் அதே சமயத்தில் அவள் ஒரு சீமாட்டியாகவும், ஸ்திரீகளுக்கான ஒழுக்கங்கள் கொண்ட போதுமான நற்குணமுடையவளாய் இருப்பாளாக. அப்படிப்பட்டவளை எதிர்நோக்குகிற எந்த மனிதனும், அவனுக்குள் சிறிதளவு புருஷத்தன்மை இருக்குமானால், அவளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவனுடைய தொப்பியை தலையிலிருந்து எடுப்பான். ஒரு விழுந்து போன தேவனுடைய குமாரனே அவ்விதமாய் நினைப்பானென்றால், தேவன் மேல்பற்றிருக்கும் உறுதியினிமித்தம் சரியை சரியென்றும், தவறை தவறென்றும் அழைக்கும் மனிதனைக் குறித்து தேவன், தம்மில் என்ன நினைப்பார். 41இன்றைக்கு நமக்கு சபையில் மறுபடியும் ஒரு நல்ல, பழங்காலத்து பரிசுத்த பவுலின் எழுப்புதலும், வேதாகமம் கூறுகிற பரிசுத்த ஆவியுமே தேவைப்படுகிறது. கிறிஸ்தவம் என்ற பெயரில் இந்த உறுதியில்லாத (ஜீவனில்லாத) கிறிஸ்தவ காரியங்கள் அதிகப்படியாக போய்க்கொண்டும், நடந்துகொண்டும் இருக்கிறது. அதிகப்படியான ஸ்தாபனங்கள், அதிகப்படியான வேதசாஸ்திரம், அதிகப்படியான கல்வி... நான் அதை ஆதரிக்க முயற்சிக்கவில்லை ... சபை எவ்வளவு முடமாகி இருக்கிறதோ அந்த அளவுக்கு மக்களும் ஏதோ ஒருவிதத்தில் முடமாகி நடக்க முடியாமற் போயிருக்கிறார்கள். இதோ, காரியம் இதுதான். சபை அந்த அளவுக்கு முடமாகியிருக்கிறது (crippled), அதற்காக கல்வி உங்கள் ஊன்றுகோல் அல்ல; உங்கள் விசுவாசமே உங்கள் ஊன்று கோலாயிருக்கிறது. ஆமென். சரிதான். கல்வியால் அதை செய்யவே முடியாது, ஸ்தாபனத்தால் அதை செய்யவே முடியாது; “மேல் வீட்டு” அனுபவத்துக்கு மாறாக எந்த ஒரு ஸ்தாபனமும் இருக்கவே முடியாது. பெந்தெகோஸ்துவின் இடத்தை எந்த ஒரு பள்ளிக் கூடமும் ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது. அதினால் ஒருபோதும் முடியாது. “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். வேதாகம அனுபவத்துக்கு திரும்பிச் சென்று, மறுபடியும் பிறந்து, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, வெண்மையாக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட, இருமுறை பிறந்த கிறிஸ்தவர்களே இன்றைக்கு நமக்கு தேவைப்படுகிறதாயிருக்கிறது. இன்றைக்கு உலகத்துக்கு தேவையாயிருக்கிறது என்னவென்றால் ஒரு எழுப்புதல், அதாவது பழங்கால எழுப்புதல், ஏறக்குறைய கி.பி. 66-ல் பரிசுத்த பவுல் பெற்றுக்கொண்ட அப்படிப்பட்ட ஒன்று. 42இப்பொழுது, என்னுடைய சகோதரனே, சகோதரியே, இந்த பலதரப்பட்ட கூட்டத்தார் அவர்களோடு கூட போனதை கவனிக்கிறோம். கொஞ்ச நாட்கள் கழித்து அவர்கள் குறைகூற துவங்கினார்கள். அதைத் தான் ஒவ்வொரு தேவனுடைய அசைவிலும் நாம் கண்டுபிடிக்கிறோம். மெத்தோடிஸ்டுகளாகிய நீங்களும் அதைத்தான் உங்களுடைய சபையில் நீங்கள் காண்கிறீர்கள்; பாப்டிஸ்டுகளாகிய நீங்களும் அதைத்தான் உங்கள் சபையில் காண்கிறீர்கள். பிரஸ்பிடேரியன்களே, பெந்தகொஸ்தேக்களே, நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் அப்படிப்பட்டவர்களை காண்பீர்கள். அது ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார். அங்கே கடந்து போன பதினேழாம் நூற்றாண்டில், ஜான்வெஸ்லி எழுப்புதலை பெற்றிருந்தபோது, ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார் அவர்களோடு கூட சென்றனர். மார்டின் லூத்தர் எழுப்புதலை பெற்றிருந்தபோது, ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார் அவர்களோடு கூட சென்றனர். ஜான் ஸ்மித் மூலமாக பாப்டிஸ்டுகள் எழுப்புதலை பெற்றுக்கொண்ட போது, ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார் அவர்களோடுகூட சென்றனர். பெந்தெகொஸ்தேயினர் எழுப்புதலை பெற்றுக்கொண்டபோது, ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார் அவர்களோடு கூட சென்றனர். 43சரியாக அப்படிப்பட்ட காரியம் தான் அதை ஒன்றிற்கும் பிரயோஜன மற்றதாக மாற்றிப்போட்டது. உண்மையிலேயே அதுதாமே அசலான நபர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து சபையில் தரித்திருந்து, இவ்விதமான பலதரப்பட்டவர்களை ஜெபித்து வெளியேற்றி, தொடர்ந்து முன்னேறி சென்றிருப்பார்கள். அப்பொழுது மெதொடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் மற்றும் பெந்தெகொஸ்தே சபைகளில் தொடர்ந்து எழுப்புதல் போய்க் கொண்டிருந்திருக்கும், அப்படிப்பட்ட ஒன்று இல்லாததற்கு காரணம் அந்த பலதரப்பட்ட கூட்டத்தார்தான். அவர்கள் (எகிப்தை விட்டு வெளியே புறப்பட்டு தொடர்ந்து சென்றார்கள். எனவே அவர்கள் அங்கே போய் சேர்ந்தவுடன் அவர்கள் குறைகூற துவங்கினார்கள். அந்த வனாந்திரத்திற்கு வந்து மூன்று மாதம்தான் ஆகிறது. அதற்குள் அவர்கள்,“ஓ, எங்களுக்கு கொஞ்சம் பூண்டும், கொஞ்சம் வெங்காய இனப்பூண்டுவகையும் இருந்தால் நலமாயிருக்கும்”, என்று கேட்கத் துவங்கினார்கள். அங்கே அவ்விடத்தில் அவர்கள் சென்றடைந்தபோது, அவர்களுக்கு பூண்டுக்கு பதிலாக தூதர்களின் உணவு கொடுக்கப்பட்டது, இருப்பினும் அவர்கள் குறை கூறினார்கள். ஏனென்றால், அவர்களுடைய உணவு செரிமான அமைப்பு (gastronomics) தூதர்களுடைய உணவை செரிமானம் பண்ணக்கூடிய நிலையில் இல்லை. இன்றைக்கு விஷயமே அதுதான். நமக்கு பழங்காலத்து, பரிசுத்த ஆவியின் எழுப்புதலை பெறாமலிருக்கிறோம் மற்றும் நம்முடைய ஆவிக்குரிய உணவு உண்ணும் அமைப்பானது உண்மையிலேயே நல்லதும், பழங்காலத்து பாணியிலான, பரிசுத்தஆவியின் நிலையான எழுப்புதலையும் செரிமானம் பண்ணக்கூடிய நிலையில் இல்லை. நமக்கு ஒருமருத்துவரின் மருந்துட்டு அவசியம், அதென்னவெனில் நம்மை சரிசெய்யக்கூடிய மருத்துவர் - இயேசுவின் மருந்து சீட்டே நமக்கு அவசியமாயிருக்கிறது. நிச்சயமாக அவர்களோ காத்திருப்பதில்லை. அவர்கள் எகிப்தையே நினைத்துக்கொண்டிருந்து, அவர்கள் பின்னுக்கு திரும்பிப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஒன்று எழும்புகிற ஒரு சபையை நீங்கள் பார்ப்பீர்களானால், அது ஒருபுற்றுநோயை போல் பரவி, முழுசபையையும் அது கொன்று போடுகிறது. அது சரிதான், அது துவங்கின மாத்திரத்தில் அதைவெளியே துரத்திப் போட வேண்டும். இப்பொழுது, அவர்கள் வெகுதூரம் கூட சென்றிருக்க மாட்டார்கள். எனவே, சிந்தித்துப் பாருங்கள். பரத்திலிருந்து வந்த, தூதர்களின் உணவை புசித்தும், குறைகூறிக் கொண்டிருந்தார்கள். அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து வந்த தூய்மையும், பரிசுத்தமுமான ஜீவ தண்ணீரை குடித்தும், குறைகூறிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் நைல் நதியின் சேற்று தண்ணீரையே குடிக்க விரும்பினார்கள். இன்றைக்கும் காரியம் அவ்விதமாகவே இருக்கிறது. 44“ஓ, பிரசங்கியே, நீங்கள் மிகவும் குறுகியமனப் பான்மை கொண்டவராயிருக்கிறீர்கள். நீங்கள் இவ்விதமான காரியங்களுக்கும், அவ்விதமான காரியத்திற்கும் எதிராக பேசுவீர்களானால், நீங்கள் சபையிலிருந்து எல்லா சுக போகங்களையும் எடுத்து போட்டுவிடுவீர்கள்”,என்று மக்கள் கூறலாம். சகோதரனே சபை மாத்திரம் நிற்க வேண்டிய இடத்தில் நிற்கும்படிக்கு உறுதிகொள்வாளானால், அவள் தேவனுடைய காரியங்களை நேசித்து, உலக காரியங்களை வெறுத்துவிடுவாள். நம்முடைய பலதரப்பட்ட கூட்டத்தார் அப்படிக் கிடையாது. இன்றைக்கு காரியமே அதுதான்; ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார், உலக காரியங்களை நேசித்து, அதே சமயம் சபையோடு கூட சேர்ந்து அனுதாபப்படுகிற ஒருகூட்ட மக்கள். அதுதான் யாரோ ஒருவரை விழும்படிக்கு செய்கிறது. அதுதான் ஜெப கூட்டத்தை நிறுத்தி போடுகிறது. அந்த வழியில்... அது எல்லா விதமான உலக மக்களின் வழக்கங்களை சபையில் நுழையும்படிக்கு ஏற்பாடு செய்து, பிரசங்கபீடத்தை முன்னிலையிலிருந்து எடுத்து போடுகிறது. கீழ் தளத்தில் மட்டுமே அக்கினிகாணப்படுகிறதா யிருக்கிறது. அதுதான் ஒரு பிரசங்கியை பதினைந்து நிமிடங்களுக்கு பிரசங்கம்பண்ணும்படிக்கு கூறி, அதை (பிரசங்கத்தை) ரோஜா பூக்கள் கதையாகவும் அல்லது சிகப்பு பறவைகள் கதையாகவும் அல்லது வேறெகட்டுக்கதையாகவும் மாற்றிப்போடுகிறது. ஆனால், நீங்கள் மறுபடியும் பிறந்த ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சுவிசேஷத்தை கேட்க (hear) விரும்புவீர்கள்; காரணம் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த ஒரு மனிதன்... இயேசு, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”,என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக அவ்விதம் நடந்திருக்கிறது. கலப்பின கூட்டத்தார்கள்... 45அவர்கள் தொடர்ந்து சென்றார்கள். ஆம், தங்களுடைய (மருத்துவம் மூலப்பொருட்களின் நுட்பங்களையும், தங்களுடைய இயந்திர கருவிகளையும், தங்களுடைய மருத்துவ அறிவியலையும், அவர்கள் பெற்றிருந்த அதின் முறைமைகளையும் மற்றும் இயந்திர வியலையும் குறித்து அதிகமாக பெருமையடித்துக் கொள்ளும் எகிப்திய வைத்தியர்களை விட்டு அவர்கள் வெளிவந்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய வைத்தியர்களை குறித்து பெருமையடித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் மகத்தான வைத்தியருடன் பிரயாணம் பண்ணும்படிக்கு அதைவிட்டு வெளிவந்து இருந்தும், இன்னும்குறைக் கூறிக் கொண்டிருந்தார்கள். அது இன்றைக்கு இருக்கிற பலதரப்பட்ட கூட்டத்தாரைப் போல் இல்லையா? நீங்கள் முதலாவது அறிந்து கொள்ள வேண்டியது, அவர்கள் காதேஸ் - பர்னேயா என்னுமிடத்திற்கு வந்திருந்தார்கள். காதேஸ் - பர்னேயா என்பது நியாயத்தீர்ப்பின் இருக்கை ... உலகத்தின் நியாயத்தீர்ப்பின் இருக்கை (judgement seat). இந்த இடத்தின் உண்மையான பெயர், இதினுடைய அர்த்தம் என்னவெனில், “ஒரு பெரிதான, அற்புதமான ஊற்று', என்பதாகும், அது கொப்பளித்துக் கொண்டே இருக்கும்... பாலைவனத்தில் ஒரு கூட்ட பனைமரங்கள் வளர்ந்து, அவ்விடத்தில் சில குடிசைகளும் போடப்பட்டு, அத்தேசத்தின் மக்கள் அல்லது கொஞ்ச எண்ணிக்கையுள்ள மக்கள் வசிக்கும் ஒரு வாசஸ்தலமாகும். அங்கே அதை சுற்றிலும் எவ்விடத்திலும், இந்த மகத்தான , பெரிய ஊற்றிலிருந்து தோன்றின சிறிய, மிகச்சிறிய ஊற்றுகள் கொப்பளித்துக் கொண்டிருந்தன. 46அது சபைக்கு எவ்வளவு ஒரு அழகான எடுத்துக் காட்டாக இருக்கிறது. அங்கே வெளியே அந்த வனாந்திரத்தில், தண்ணீரை பெற்றுக் கொள்வதற்கு, யாவும் காதேஷக்கு வரவேண்டியதாய் இருந்தது. தண்ணீரை பெற்றுக்கொள்வதற்கு எல்லாம் காதேஷுக்கு வரவேண்டியதாய் இருந்ததால், அந்த பெரிய ஊற்றானது மற்ற ஊற்றுகளை போஷித்தது. அது பரலோகத்திற்கு மாதிரியாகவும் இருக்கிறது, அது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு மாதிரியாகவும் உள்ளது. மற்றும் அந்த நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து துவங்குகிறதாயிருக் கிறது. எனவே இந்த பெரிய ஊற்றானது போஷிக்கக்கூடியதாய் இருந்ததால் இதனிடத்திலி ருந்து மற்ற சிறிய ஊற்றுகள் புறப்பட்டுசென்றன, அதற்கு அர்த்தம் என்னவெனில், பரலோகம் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் இருக்கையாய் இருக்கும் பட்சத்தில், நியாயந்தீர்க்கும்படிக்கு சபைக்கு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் சபைகள் எல்லாம் அந்த நியாயத்தீர்ப்பின் இருக்கையிலிருந்து அவர்களுக்கு ஜீவனையும், தண்ணீரையும் கொடுக்கிறது. 47இன்றைக்கு பிரச்சனையே என்னவெனில், மக்கள் சபைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எது செய்தாலும் முதுகில் தட்டிக்கொடுக்கப்படுகிறார்கள் (patted). எனவே விஷயமே இதுதான், காரணம் காணிக்கை தட்டுவரும்போது அவர்கள் காணிக்கை போடுகிறார்கள், காரணம் அவர்கள் டீகன்மார்களாய் இருக்கிறார்கள், காரணம் அவர்கள் சபையில் ஏதோ ஒரு அந்தஸ்தில் இருக்கிறார்கள்; அல்லது மற்றவரைக் காட்டிலும் ஒரு சிறப்பான காரை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள் அல்லது மற்றவரைக் காட்டிலும் சிறப்பான உடை அணிந்து வருகிறார்கள் அல்லது அது மாதிரி வேறெதாவது இருக்கலாம், எனவே அதினிமித்தம் உங்களுக்கு மரியாதை கொடுத்து உங்களை முதுகில் தட்டிக் கொடுக்கிறார்கள். சகோதரனே கருப்பைகருப்பு என்றும் வெள்ளையை வெள்ளை என்றும் அழைக்கக்கூடிய சில பண்டைய பாணியிலான (old-fashion) பிரசங்கிமார்கள் இன்றைக்கு நமக்கு தேவையாயிருக்கிறது. யோவான் ஸ்நானகனை எடுத்துக்கொள்ளுங்கள், யூதேயாவின் வனாந்திரத்திலிருந்து அவன் வெளியே வந்தபோது, அவன் மிகவும் நன்றாக உடையணிந்தவனாக இல்லை . அவன் ஒரு துண்டு ஆட்டுத்தோலை சுற்றி கொண்டவனாயும், ஒட்டக மயிரினால் ஆன தோல் கச்சையை இறுக சுற்றிக் கொண்டிருந்து, அவன் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து மனந்திரும்புதலை பிரசங்கித்தான். தன்னுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவியை எடுத்துக்கொண்ட ஏரோது, அங்கே நடந்து கொண்டிருந்த கூட்டத்திற்கு வந்தான், அங்கே இருந்த டீகன்மார், இப்படி கூறியிருப்பார் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது;“விவாகமும் விவாகரத்தை குறித்தும் இன்றிரவு பிரசங்கிக்க வேண்டாம், காரணம் நம்மத்தியில் இன்றிரவு ஒரு பெரிய மனிதர் வந்திருக்கிறார். அது மாதிரி எதையும் செய்திடாதிங்க. 48தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதே பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டவனும், பாவம் (sin) என்ற எந்தவொன்றையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு மனிதனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. அவன் பிறப்பதற்க்கு மூன்று மாதத்திற்கு முன்னமே, யோவான் ஸ்நானகன் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டான். அவன் தன்னுடைய கர்ப்பத்தில் மரித்தவனாயிருந்தான், ஆனால் அங்கே இயேசுவின் நாமத்தைகுறித்து பேசின மாத்திரத்தில், அவன் தன்னுடைய தாயின் கர்ப்பத்தில் துள்ளிக் குதித்தான். அவன் பிறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்னமே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்ட ஒரு மனிதன், அப்படிப்பட்டவன் உலக காரியங்களோடு சமரசமாவான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவன் எழுந்து நேராக அவனிடத்தில் நடந்து சென்று, தன்னுடைய விரலை அவனுடைய மூக்கின் கீழாக நீட்டி, “அவளை நீ வைத்திருப்பது நியாயமானது அல்ல,” என்றான். அதற்காக அவன் தலை கிரையமானது. ஆனால் இன்றைக்கு இரவில் மீட்கப்பட்டவர்கள் மத்தியில் வேறொரு உலகத்தில் அவன் இருக்கிறான். ஆமென். அது பிரபலமானதாக இல்லை , ஆனால் அது சத்தியம். ஆமென். கவனியுங்கள். 49நான், 'ஆமென்' என்று கூறும்போது பயப்படாதீங்க, அதற்கு அர்த்தம் அப்படியே ஆகக்கடவது' என்பதாகும். அது சரிதான். இப்பொழுது, சில வேளைகளில் நான் உணர்ச்சி வசப்படுகிறேன் என்று எனக்கு தெரியும். நான் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் அப்படி கிடையாது, நான் எங்கே இருக்கிறேன் என்று நான் அறிவேன். நான் எங்கே இருக்கிறேன் என்றும் எனக்கு தெரியும். நான் யாரைக் குறித்து பேசுகிறேன் என்று எனக்கு தெரியும், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கவனியுங்கள். அது எவ்வளவு அழகாயிருக்கிறது. 50எனவே அவர்கள் முனகிக் கொண்டு குறைகூறிக் கொண்டு, கடைசியாக காதேஷக்கு வந்து சேர்ந்தார்கள். இந்த நியாயத்தீர்ப்பின் இருக்கையாகிய காதேஷுக்கு அவர்கள் வந்தபோது, நியாயத்தீர்ப்பு... இப்பொழுது எல்லா ஒட்டுமொத்த காரியமும் கூட்டி சேர்க்கப்பட்டது. எனவே என்றோ ஒரு மகிமையின் நாள் அன்று; அந்தநாள் இப்பொழுது மிகவும் சமீபமாய் இருக்கிறது. அப்பொழுது சரியானதுக்கும், தவறானதுக்கும் இடைவெளி உண்டாயிருக்கும். மிருகத்தின் முத்திரையினால் முத்தரிக்கப்படுதல் மற்றும் தேவ ஜனங்கள் தேவனுடைய முத்திரையினால், முத்தரிக்கப்படுதல் போன்ற காரியம் வெகு சீக்கிரத்தில் நடக்கப்போகிறது மற்றும் அது இப்பொழுதே நடந்துகொண்டிருக்கிறது என்று என்னால் வேதவசன அதிகாரத்தைக் கொண்டு போதுமான அளவுக்கு நிரூபிக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். மிருகத்தின் முத்திரை எனப்படுவது கிறிஸ்துவ விசுவாசத்தை எதிர்ப்பது அல்லது அதை மறுதலிப்பதற்க்கான முத்திரையாக இருக்கிறது. எனவே சரியானதை மறுதலித்து வாழ்நாள் முழுவதும் தவறில் இருக்கும்படிக்கு தங்களுடைய காதில் துளையிட்டு கொண்டவர்கள் மிருகத்தின் முத்திரையை பெற்றவர்களாய் இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டவர்களோ, தேவனுடைய முத்திரையினால் முத்தரிக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். எபேசியர் 4:30-ல், “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்”, என்று கூறுகிறது. அது சாதாரணமாக இருக்கிற காரியத்தை பொறுத்துக் கொள்ள முடியாத இடத்துக்கு ஒரு நபர் வருகிறதாயிருக்கிறது. 51அது ஒரு நபர் பரலோகத்திற்கு போவதற்கு முயற்சி செய்வது போல் இருக்கிறது. ஒருவன் கைநிறைய டிக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தான். அவன் ரெயில் வண்டியில் ஏறினவுடன், ஒரு நபர் அவனிடம், “ஏன் இத்தனை டிக்கெட்டுகளை வாங்கி வைத்திருக்கிறாய்”, என்றான். அவன், “அவைகளில் ஒன்று மெத்தொடிஸ்டு, ஒன்று பாப்டிஸ்டு, ஒன்று கிறிஸ்தவ அறிவியல், ஒன்று ஏழாம் நாள் அட்வன்டிஸ்டு, ஒன்று எல்லாவற்றிற்கும் சேர்த்து, என்றான். அந்த மனிதன், ”அப்படியானால் இந்த எல்லா டிக்கெட்டுகளும் எதற்காக வைத்திருக்கிறாய்“, என்றார். அவன், “நல்லது, ஐயா, நான் அதை உங்களுக்கு கூறட்டும்”, என்றான். ஒருத்தர் இதுதான் சரி, அதுதான் சரி என்றதால், நான் எல்லாவற்றையும் முயற்சிக்கும் வகையில் அவைகளை வாங்கியிருக்கிறேன். அதனால் தான் அவர்கள் ஒவ்வொருத்தரிடமிருந்தும் ஒரு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு போய்விடலாமே என்றுநினைத்தேன்“, என்றான். ஆனால் அவனோ ஆக்கினைக்குள்ளானான். 52சகோதரனே, பரலோகத்திற்கு போவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது கிறிஸ்து இயேசுவின் மூலமாக, பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பதினால் மட்டுமே. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், “மனுஷன் மறுபடியும் பிறக்காத பட்சத்தில், அவன் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான்”, என்று கூறியிருக்கிறார். ஆமென். நண்பர்களே, எப்பேற்பட்ட ஒரு நாளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எப்பேற்பட்ட நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், எப்பேற்பட்ட ஒரு மாற்றம், எப்பேற்பட்ட ஒரு அசைவு. தேவன் எப்பொழுதும் தம்முடைய சபையை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர்களெல்லாரும் பிரான்ஹாம் கூடாரத்திற்கு வருவார்கள் என்று நான் கூறவில்லை; அவர்களெல்லாரும் வால் தெருவிற்கு (wall street) போவார்கள் என்றும் நான் கூறவில்லை ; அவர்களெல்லாரும் கிறிஸ்தவ சபைக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு சபைக்கோ போவார்கள் என்று நான் கூறவில்லை; ஆனால் தேவன் தன்னுடைய அங்கத்தினர்களை ஒவ்வொரு சபையிலும் கொண்டிருக்கிறார் என்று நான் கூறுகிறேன். மறுபடியும் பிறந்த, தன்னுடைய சரீரத்தின் அங்கத்தினர்களை அவர் ஒவ்வொரு சபையிலும் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட அவர்கள் தான் தேவனுக்கு உண்மையாய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் கர்த்தராகிய இயேசுவை தங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்புகூறுவார்கள். அவர்கள் தங்கள் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருப்பதிலும், ஜெப கூட்டத்தில் கலந்துகொள்வதிலும், இன்னும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று தங்களால் செய்ய முடிந்த யாவற்றையும் செய்து கொண்டிருப்பதிலும் நீங்கள் அவர்களை கண்டு பிடிக்கமுடியும். அது சரிதான். ஆனால் பலதரப்பட்ட கூட்டத்தாரோ அவர்களை அடக்கவும், அமிழ்த்திப் போடவும், திரும்பவும் உலக காரியங்களுக்கு இழுக்கும்படிக்கு முயற்சி செய்கிறார்கள். இன்றைக்கு நமக்கு நியாயத்தீர்ப்பு துவங்குகிற, இன்னொரு காதேஸ் - பர்னேயா நமக்கு தேவையாயிருக்கிறது. 53அதற்கு பிறகு என்ன நடந்தது? கோரா எழும்பி, “மோசே மட்டும்தான் பரிசுத்தவான் இல்லை; இன்னும் நிறைய பரிசுத்த மக்கள் பரிசுத்தமானவர்களாய் இருக்கிறார்கள்”, என்றான். எனவே அவன் ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி, வெளியே புறப்பட்டுச் சென்று, இந்த கூட்டத்தை வைத்துக் கொண்டு, “நாங்கள் தீர்க்கதரிசிகள், நான் இது, நாங்கள் அது', என்றான். அடுத்து நடந்தது என்ன? தேவன் மோசேயினிடத்தில், அவனைவிட்டு உன்னை வேறு பிரித்துக்கொள்“, என்றார். அதன் பின்னர் அவர் பூமியை திறந்து, அவர்களை விழுங்கிக் கொண்டார். அதுதான் அந்த முடிவாயிருந்தது. கோராவுடன் சென்ற மக்களின் முடிவு அதுதான். அதற்கு பிறகு என்ன நடந்தது? தேவன், “நாம்...போகப் போகிறோம்”, என்றார், மோசேயினிடத்தில், “நாம் போகப்போகிறதும், உனக்கு நான் வாக்குத்தத்தம் பண்ணின அவ்விடத்திற்கும் அந்த தேசத்தை வேவு பார்க்கும்படிக்கு சில வேவுக்காரர்களை அனுப்பும்”, என்றார். அந்த தேசம் நல்ல தேசம் என்று தேவன் கூறியிருக்கும் பட்சத்தில், அவர் தன்னுடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் வாக்குரைத்திருக்கும் பட்சத்தில், அது எவரையும் திருப்தி செய்யக் கூடியதாய் காணப்படும். தேவன் அதை கூறியிருக்கும் பட்சத்தில். இப்பொழுது, நாம் அதற்கு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”, என்று கோஷமிடுகிறோம். ஆனால், சகோதரனே, அவர்களுக்கு அந்த வாக்குத்தத்தத்தை செய்த அதே தேவன்தான், அவர்களுக்கு செய்தது போல நமக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் செய்திருக்கிறார். அப்படியானால் ஏன் நாம் அதை சந்தேகப்பட வேண்டும்? “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் சகோதரன் பிரான்ஹாம் அது ஒரு பலதரப்பட்ட கூட்டத்தினரா?” ஆம், கச்சிதமாக அதுதான் உண்மை . அது ஒரு பலதரப்பட்ட கூட்டமாயிருக்கிறது. இப்பொழுது நாம் சரியாக காதேஸ் - பர்னேயாவில் இருக்கிறோம். 54பெரிய மனிதர்கள் இத்தேசத்தில் ஊழியம் செய்து இருக்கிறார்கள். நமக்கு ஜாக் ஸ்குலர், பில்லிகிரஹாம், ஓரல்ராபர்ட்ஸ், டாமிஹிக்ஸ், டாமிஆஸ்பர்ன் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்; இத்தேசம் முழுவதும் முன்னும் பின்னும் சென்ற அநேக வல்லமையுள்ள மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றிரவு சபைகளைக் காட்டிலும் சட்டத்துக்கு விரோதமாக மது விற்கும் இடங்கள் தான் அதிகமாக இருக்கிறது மற்றும் அவை தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது. காரணம் என்ன? அது ஒரு பலதரப்பட்ட கூட்டத்தார். நான் உங்களுக்கு ஒன்றை கூறட்டும்: ஆயிரத்தில் ஏறக்குறைய ஒரு சதவீதத்தினர் மட்டும் கலந்து கொள்ள முயற்சி செய்யக் கூடிய ஜெபக் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் இந்த தேசம் ஒதுக்க வேண்டாம், ஆனால் இந்த முழு தேசமும் தேவனிடத்தில் திரும்பும்படிக்கு விட்டுவிடுங்கள். எனவே சாராய தொழிற்சாலை சுற்றிலும் எங்குமிருக்கும் சட்டவிரோதமாக செயல்படும் சாராயம் விற்கும் இடங்களை உடைத்தெறிவோம்; மேலும் கள்ளத்தனமாக மது விற்கும் இடங்களையும், இன்னும் அப்படிப்பட்ட எல்லா காரியங்களையும் உடைத்தெறிவோம். மேலும் இந்த சிறிய அசிங்கமான குட்டை பாவாடைகளை பெண்கள் அணிந்து பழகிப்போனதை தடுத்து மற்றும் அவைகளை தெருவில் அணிந்து செல்வதை சிறைக்கு அனுப்புகிற குற்றமாக ஆக்கவேண்டும்; மற்றும் குடும்பத்தையும், வீட்டையும், சபையையும் சுத்தம் செய்வோம். தேர்தல் வேட்பாளர்களை பிரசங்க பீடத்தில் நிற்க வைப்பதற்கு பதிலாக பிரசங்கிமார்களை பிரசங்க பீடத்துக்கு பிரசங்கிக்க கொண்டு வருவோம்; மற்றும் புருஷர்களும், ஸ்திரீகளும் தேவனை நோக்கி கூப்பிடக்கூடிய பண்டைய பாணியிலான எழுப்புதலை உருவாக்குவோம். அப்பொழுது இந்த தேசம் முழுவதும் பரவக்கூடிய எழுப்புதலை நாம் பெற்றுக் கொள்வோம். நாம் இதுவரை பெற்றிருந்ததிலேயே அதுதான் சிறந்த பாதுகாப்பாக இருக்கிறது. உலகத்திலேயே அந்த ஒரு காரியம்தான் அணுகுண்டை தடுத்துப்போடும். ஆம், குண்டுக்குப் பாதுகாப்பான இடம், அவருடைய சிறகுகளின் கீழாக இருக்கிறது. ஆமென். அது சரிதான். 55கவனியுங்கள், எங்கே நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட வேண்டுமோ அவ்விடத்துக்கு காதேஸ் - பர்னேயா கொண்டு வருகிறது; மற்றும் மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்து பன்னிரெண்டு வேவுக்காரர்களை தெரிந்தெடுத்தார். அந்த தேசத்தை வேவு பார்க்கும்படிக்கு அவர்களை அனுப்பினார். ஆனால் அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் எப்படிப்பட்ட செய்தியை தெரிவித்தார்களென்று நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “ஓ, அது ஒரு நல்ல தேசம். ஓ, அது ஒருஅருமையான தேசம். அது பாலும், தேனும், ஓடுகிற தேசம்”, என்றார்கள். ஆனால் அவர்களில் பத்து பேரோ, “நம்மால் அதை சுதந்தரிக்க முடியாது, நம்மால் அதை சுதந்தரிக்கவே முடியாது. அங்கே அமோரியர்கள், மீதியானியர்கள், கானானியர்கள் இன்னும் எல்லோரையும் சந்தித்தோம். அது மட்டுமல்ல அவர்களுக்கு முன்பாக நாம் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்பட்டோம். அவர்கள் பராக்கிரமசாலிகள், ஆஜானுபாகுவான நபர்கள், அவர்களுடைய பட்டணங்கள் எல்லாம் மதிற்சுவரினால் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது, நம்மால் அதற்குள் போவதற்கான சாத்தியமே இல்லை. ஓ, எங்களுடைய இருதயங்கள் அதை நினைக்கும்போது சோர்ந்து போகிறது, நம்மால் அதை சுதந்தரிக்க முடியாது”, என்றார்கள். அம்மக்களின் பெருவாரியான தெரிந்து கொள்ளுதலை, அதை ஜனங்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அங்கே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருத்தருடைய பெயர் காலேப், மற்றொருவருடைய பெயர் யோசுவா, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு வரக்கூடிய திராட்சை குலையை அவர்கள் தூக்கிக் கொண்டு வந்தார்கள். காலேப், “தீர்க்கதரிசிக்கு முன்பாக உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை நீங்கள் அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்”, என்றார். அவர், “நம்மால்அதை உண்மையிலேயே சுதந்தரித்துக் கொள்ள முடியும். எனவே உடனே சென்று அதை சுதந்தரித்துக் கொள்வோம்”, என்றார். 56தேவனுடைய வாக்குத்தத்தம் உண்மையானது என்று மக்களுக்கு முன்பாக சவால் விடக்கூடிய (challenge) ஒரு மனிதன் இந்த மணிவேளையில் நமக்கு அவசியமாயிருக்கிறது. பெந்தெகொஸ்தேவின் ஆசீர்வாத பொழிதலை கடைசி நாட்களில் கொடுப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்; நான் கூறுவது ஒரு உண்மையான பெந்தெகோஸ்து பொழிதல். அது வரக்கூடிய நேரம்வந்திருக்கிறது, இன்னொரு காதேஸ் - பர்னேயா வந்திருக்கிறது. ஆம், ஐயா. அவர்கள், “உண்மையிலே நம்மால் அதை சுதந்தரித்துக் கொள்ளமுடியும். நிச்சயமாக நம்மால் அதை பெற்றுக் கொள்ள முடியும்”, என்றார்கள். அது என்னவாயிருக்கிறது? அது, அந்த கோழை சபை அங்கத்தினர்கள், தங்களுடைய கண்கள் எதை கண்டதோ அதையே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காலேபும், யோசுவாவும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தது; அங்கிருக்கும் இராட்சதர்கள் எவ்வளவு பெரியதாக காணப்பட்டார்கள்; அவர்களுடைய மதிற்சுவர் எவ்வளவு பெரிதாக இருந்தது என்று அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை; ஏனென்றால் அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை மட்டுமே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்றிரவு தேவனோடு தொடர்ந்து போக வேண்டும் என்று ஒரு புருஷனும், ஸ்திரீயும் விரும்புவீர்களா னால், 'நம்மால் முடியும் அல்லது நம்மால் முடியாது என்று உலகம் என்னதான் கூறினாலும்', அதற்கு நீங்கள் எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம், ஏனெனில் தேவன் அதை வாக்குத்தத்தம் செய்தபடியால், அது காரியம் முடிந்ததாயிருக்கிறது. அதை நான் நேசிக்கிறேன். தேவன் அவ்விதமாய் கூறியிருக்கும் பட்சத்தில், அது காரியத்தை என்றென்றைக்கும் முடித்து வைத்ததாயிருக்கிறது. 57இன்றிரவு நான் இதை உங்களுக்கு கூறட்டும், உத்தமமாய் இருக்கிறது போல நடிக்கிற போலித்தனம் நமக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது; பாவனை விசுவாசம் நமக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது; தான் கிறிஸ்தவர் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பது போன்ற தேவையில்லாத காரியங்கள் நமக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. நிச்சயமாக. பிசாசு எப்பொழுதும் தன்னுடைய முன்னோடிகளான போலிகளை முன்வைத்து மக்களை பயமுறுத்துகிறான். நமக்கு ஒரு போலியான பெந்தெகொஸ்து இருந்திருக்கிறது; நமக்கு ஒரு போலியான மழை இருந்திருக்கிறது; நமக்கு இது மற்றும் அது போன்ற ஒரு போலியானது இருந்திருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒவ்வொரு சிறு காரியத்தின் மத்தியிலும் ஒரு உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமும், உண்மையான பெந்தெகொஸ்தே ஆசீர்வாதமும் இருக்கிறது. ஒரு உண்மையான தெய்வீக சுகமளித்தல் இருக்கிறது; ஒரு உண்மையான (பரிசுத்த ஆவி இருக்கிறது; ஒரு உண்மையான மக்கள் இருக்கிறார்கள். எனவே இது நாம் முன்னுக்கு போக வேண்டிய நேரமாயிருக்கிறது. அது சரிதான். 58மக்கள் இப்பொழுது தீர்மானம் எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறார்கள், நீங்கள் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். ஒவ்வொரு மனிதனும் இக்கட்டான நேரத்தை சந்திக்கும்படிக்கான இடத்திற்கு வருகிறான். நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தண்டை நீங்கள் வந்து, நீங்கள் முடிவெடுத்தாக வேண்டும் என்ற ஓர் இக்கட்டான நேரம் உங்கள் வாழ்கையில் வந்திருக்கும். அவ்விடத்தில் ஒன்று, “நான் குற்றவாளி” அல்லது “நான் குற்றவாளி அல்ல” என்று நீங்கள் கூறியிருக்க வேண்டும். எனவே நீங்கள் நீதிபதிக்கு முன்பாக நிற்கும்போது, நீங்கள் முடிவெடுத்தாக வேண்டும். எனவே இன்று இன்றிரவு பிரான்ஹாம் கூடாரமும் தன்னுடைய முடிவை எடுத்தாக வேண்டும். ஒன்று நாம் முன்னுக்கு செல்லவேண்டும் அல்லது நாம் பின்னுக்கு செல்லவேண்டும். அதுசரி. ஒன்று நீங்கள் மறுபடியும் எகிப்தின் பூண்டு, வெங்காய இனப்பூண்டு மற்றும் அதினுடைய உணவு பண்டங்களை நோக்கிச் செல்லவேண்டும் அல்லது தேவன் வாக்குத்தத்தம்பண்ணின வாக்குத்தத்த தேசத்தை நோக்கி, தூதர்களின் உணவை புசித்து முன்செல்ல வேண்டும். ஒன்று நீங்கள் பண்டைய பாணியிலான பரிசுத்த ஆவியின் எழுப்புதலை நோக்கி செல்லவேண்டும் அல்லது நீங்கள் சாகும்வரைக்கும் உறுதியில்லாதவர்களாயும், நிலையில்லாதவர் களாயும், ஆப்பிளை கொத்திக் கொண்டிருக்கும் ராபின் பறவையைப் போல இருக்க வேண்டியது தான். நீங்கள் உங்கள் தீர்மானத்தை எடுத்தாகவேண்டும், இல்லாவிடில் உங்களால் தொடர்ந்து போகமுடியாது. 59“நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடப்பீர்கள், என்றார். எலியா, 'கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள். அவர் தெய்வமாக இல்லாத பட்சத்தில், அவரை சேவிக்க வேண்டாம்:, என்றார். தேவனோடு கூட கொண்ட உண்மையான அனுபவமே மனுஷனுடைய இருதயத்திலிருந்து பாவத்தை நீக்கிப்போடுகிறதே யல்லாமல், ஒரு சபையை சேர்ந்துக் கொள்வதோ அல்லது ஒரு கூட்டத்தை சேர்ந்துக்கொள்வதோ அல்லது ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்துக் கொள்வதோ அதை எடுத்துப் போடாது. அதற்கு விரோதமாக நான் சொல்வதற்கு எதுவுமில்லை; அவ்விதமான காரியங்களெல்லாம் சரிதான். கல்வி அதைக் கொண்டு வராது. நாம் அநேக முறை முயற்சித்தும், கசிவுள்ள தொட்டியையே நாம் பெற்றுக்கொண்டோம். ஒரு சமயம் அந்த பிரபலமான நான்கு நபர்களை நாம் பெற்றுக்கொண்டபோது, அது எல்லா யுத்தங்களையும் முடிவுக்கு கொண்டுவரும் என்று நினைத்தோம். அது யுத்தங்களை முடிவுக்கு கொண்டு வரவில்லை, ஏனெனில் அதில் ஒரு கசிவு (leak) உண்டாயிருந்தது. கல்வி திட்டங்கள் இந்த முழு உலகத்தையும் காப்பாற்றும் என்று ஒரு சமயம் நாம் நினைத்தோம். நாம் படித்து, நாம் என்னத்தை பெற்றுக் கொண்டோம்? ஒரு கூட்ட படித்த நாத்திகவாதிகளைத்தான் (atheists) பெற்றுக்கொண்டோம். அது முற்றிலும் சரியே. இந்த சமுதாய முறைமைகள் இந்த உலகத்தை காப்பாற்றும் என்று நாம் நினைத்தோம், ஆனால் இருப்பதிலேயே மிகவும் மோசமான குற்றவாளிகள் தான் இந்த சமுதாயங்கள் என்று அழைக்கப்படுகிறவைகளிலி ருந்து வருவதை நாம் கண்டுபிடித்தோம். எனவே கல்வியும், சமுதாயமும் இந்த உலகத்தை காப்பாற்றாது. இந்த உலகத்திற்கு ஒரே ஒரு இரட்சகர் மட்டும் தான் உண்டு. அது மனிதன் செய்த ஒவ்வொரு பாவத்தையும் மன்னிக்கக் கூடிய கல்வாரியில் இலவசமாய் சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் இரத்தமாயிருக்கிறது. ஏனெனில், “நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 60நீங்கள் தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொண்டு அது சரியா அல்லது தவறா என்று பார்க்கும்படிக்கு எந்த மனுஷனுக்கும், ஸ்திரீக்கும், இந்த இரவில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சவால் விடுகிறேன். மருத்துவர்கள் இவர்கள் மரித்துவிட்டார்கள் என்று கூறிசென்று விடுவார்கள், ஆனால் அந்த மரித்தவர்கள் உயிரோடே எழும்பினதை நான் பார்த்திருக்கிறேன். அநேக வருடங்கள் முற்றிலும் குருடாயிருந்த குருடர்கள் பார்வையடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். செவிடர், குருடர், முடமானவர்கள், நொண்டிகள் துள்ளிக் குதித்து கர்த்தரை துதிப்பதை நான் பார்த்திருக்கிறேன். தெருவை விட்டு வெளியே வந்த விபச்சாரிகள், சீமாட்டிகளாக மாற்றப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். சூதாட்ட அரங்கங்களிலிருந்தும், இந்த உலகத்தின் துன்மார்கமான காரியங்களிலிருந்தும் வெளிவந்த குடிகாரர்கள்; கணவான்களாகவும், பரிசுத்தவான்களாகவும் மாற்றப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். உங்களால் அதை செய்யக்கூடிய ஏதாவதொன்றை உற்பத்தி செய்யும்படிக்கு எந்த மனுஷனுக்கும் நான் சவால் விடுகிறேன். குடி மற்றும் போதையிலிருந்து விடுபடும்படிக்கு குடிபோதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று மற்றும் மின் அதிர்ச்சி சிகிச்சையையும் உலகில் இருக்கும் எல்லா உளவியலையும்; அதற்கென்று சிகிச்சையளிக்கக் கூடிய சிறந்த மனநல மருத்துவரையும் கொண்டு வந்து, இன்னும் என்னவெல்லாம் கொண்டுமுயற்சி செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தும், விடுபட முடியாமற்போன ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதே மனிதன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தெரிந்தெடுக்கப்பட்டு, தேவனுடைய ஒரு பரிசுத்தவானாகவும் மற்றும் ஒரு சுவிசேஷக பிரசங்கியாகவும் மாற்றப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். 61என்னை ஒரு பரிசுத்த உருளையர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒருவேளை நான் அப்படி இருக்கலாம். சரி, ஆனால் உலகத்தால் நான் பழிக்கப்பட்டு, அதே சமயத்தில் கிறிஸ்துவினிடத்தில் தயவை பெற்றுக்கொள்வதற்கு 'பரிசுத்த உருளையர்' என்ற பெயரில் நான்அழைக்கப்பட்டால் நான் அவர்களில் ஒருவனாக இருக்கவே விரும்புவேன். அது சரி. நான் அவரை நேசிக்கிறேன். 62நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தே ஆகவேண்டும். பாருங்கள், நீங்கள் காதேஷில் இருக்கிறீர்கள், அது வெகுதூரத்தில் இல்லை. நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திருந்தி நடப்பீர்கள்? ஏன் சபை அனலாய் இல்லை; ஏன் சபை, மக்களால் நிரப்பப்படவில்லை; ஏன் பெரிய அடையாளங்களும், அற்புதங்களும் நடப்பிக்கப் படாமல் இருக்கிறது? அதற்காக போதகர் மேல் பழிபோடாதீர்கள், அதற்கு காரணம் நீ தான். நாம் பலதரப்பட்ட கூட்டத்தாரை பெற்றிருக்கிறோம்; ஏனெனில் ஒருவர் ஒரு வழியில் இழுக்கிறார், இன்னொருவர் இன்னொரு வழியில் இழுக்கிறார். நீங்கள் தீர்மானம் எடுக்ககூடிய நேரத்திற்கு வந்தாகவேண்டும். அது போதகராயிருந்தாலும், அவரை அப்பதவியிலிருந்து நீக்கி, அதிலிருந்து அவரை முற்றிலும் விடுவித்து, அவருடைய ஸ்தானத்தில் பொருந்துகிற வேறு எவரையாவது நியமியுங்கள். அதுவே ஒரு டீக்கன்மாராக இருக்கும் பட்சத்தில், கமிட்டியிலிருந்து அவரை நீக்கி, அவருடைய ஸ்தானத்தில் பொருந்துகிற வேறு எவரையாவது நியமியுங்கள். சகோதரனே, நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்? அந்த பொறுப்பை தேவன் உன் மேல் வைத்திருக்கிறார். அது தான் காரியம். நம்முடைய சொந்த பாவங்களுக்காக நாம் ஒவ்வொருவரும் கணக்கு ஒப்புவித்து, நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் பதில் கூறவேண்டும். 63நாம் காதேஸ் - பர்னேயாவில் இருக்கிறோம் மற்றும் தேவனுடைய வார்த்தை கூறியிருக்கிறது நம்மால் அதை சுதந்தரித்துக் கொள்ள முடியும் என்று, தேவனுடைய வார்த்தை கூறுகிறது நம்மால் ஒரு எழுப்புதலை பெற்றுக்கொள்ள முடியும் என்று, இவ்விதமான மற்ற எல்லா அடையாளங்களையும், அற்புதங்களையும் தேவன் எழுப்புவார் என்று அவருடைய வார்த்தை கூறுகிறது. அதை அவர் செய்தும் இருக்கிறார். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஸ்தானத்தில் நிற்க வேண்டும். ஆனால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில் நாம் ஒன்று கூடி வந்து, எழுப்புதலை துவங்கவேண்டும். அது காரியத்தை செய்யும். 64நீங்கள் தீர்மானம் எடுக்கக்கூடிய சமயம் இப்பொழுது வரலாம். உங்கள் தீர்மான சமயம் வேறு எப்பொழுதாவது வரலாம். ஆனால் அது இப்பொழுது வருமானால், அதற்கு நீங்கள் பதில் சொல்வதுதான் சிறந்தது. நீங்கள், “ஓ, சகோதரனே, நல்லது, வேறொரு நாள் நான் தீர்மானத்தை எடுப்பேன்”, என்று கூறலாம். நீங்கள் அதை செய்தே ஆகவேண்டும். அதை இப்பொழுதே செய்வது ஏற்ற நேரமாயிருக்கிறது. என் சகோதரனே, நீங்கள் உங்கள் மனைவியோடு சென்ற ஒரு நேரம் இருந்தது. அதற்கு முன்பு, நீங்கள் திருமணம் செய்யப்போகிறீர்களா அல்லது இல்லையா என்ற தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும், நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பீர்கள். அது இவ்விதமாக கூட வந்திருக்கும், அது “நீங்கள் திருமணம் செய்யவேகூடாது” என்று ஒரு சிலர் இந்த வழியில் கூறியிருப்பார்கள். சிலர்,“நல்லது, நீங்கள் திருமணம் செய்துகொள்வது சிறந்தது', என்று கூறியிருப்பார்கள். ஒருவர், 'நல்லது, நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களானால் சந்தோஷமாய் இருப்பீர்கள்'', என்று கூறியிருப்பார்கள். இன்னொருவர்,”உங்களுக்கு நீங்களே உங்கள் தொண்டையை வெட்டிக்கொள்கிறீர்கள்', என்று கூறியிருப்பார். இவ்விதமான எல்லா காரியங்களையும் கூறியிருப்பார்கள். இருப்பினும் நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தே ஆகவேண்டும். அது சரியே. 65நியாயந்தீர்க்கக் கூடிய, இந்த காதேஸ் - பர்னேயா உங்களுக்காக வந்திருக்கிறது. ஒரு வேளை இங்கிருக்கும் ஒரு சிலர் விவாகரத்து செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கலாம். குடும்பத்தில் சில சமயம் கருத்து வேறுபாடுகள் வரக்கூடிய நேரம் ஒன்று இருக்கும். ஏதோ ஒரு வழியில் அது சரி செய்யப்படவேண்டும்; நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தாக வேண்டும். என் சகோதரனே, இன்றிரவு, இதை நான் உங்களுக்கு கூறட்டும், நீங்கள் எடுக்கவேண்டிய தீர்மானம் என்னவெனில், நீங்களும் உங்கள் மனைவியும் ஒருவருக்கொருவர் உங்கள் கரங்களை சுற்றிப்போட்டு, முழங்கால்படியிட்டு, தேவனுக்கு முன்பாக தலைவணங்கி, இயேசு கிறிஸ்துவாகிய அவரையே சேவிப்பீர்கள் என்று நீங்கள் தீர்மானம் எடுப்பீர்களானால், அதன் பின்பு விவாகரத்து நீதிமன்றங்களில் அப்படிப்பட்ட வழக்குகள் இல்லாமல், வெறிச்சோடி கிடக்கும். சரி. அதன்பின்பு உங்களுடைய வழக்கறிஞரிடத்தில் பேச வேண்டும் என்பது அவசியப்படாது, உங்களுடைய இரட்சகரிடத்தில் பேசவேண்டியதே அவசியமாயி ருக்கும். அது சரிதான். உங்களுடைய வழக்கறிஞர் உங்களுக்கு அறிவுரை கூறலாம், ஆனால் உங்கள் இரட்சகரோ உங்களை இரட்சிப்பார். ஒரு வழக்கறிஞர் உங்களுக்கு சில உளவியளையும் அவருடைய சில உளஞ்சார்ந்த படிப்பினையையும் கொடுக்கலாம், ஆனால் இயேசு கிறிஸ்து தன்னுடைய கிருபையையும், அன்பையும் உங்களுக்கு கொடுப்பார்; இவை எல்லாவற்றின் இடத்தையும் அது எடுத்துக் கொள்ளும். 66இன்றிரவு, நீங்கள் வியாதிப்பட்டிருப்பீர்களானால், கிறிஸ்துவை உங்கள் சுகமளிப்பவராக (Healer) ஏற்றுக்கொள்ளப்போகிறீர்களா அல்லது இல்லையா என்று நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தாக வேண்டும். அதினோடு நீங்கள், முடிவெடுக்கலாமா, வேண்டாமா என்றோ' அல்லது 'மந்தமாகவோ இருக்கமுடியாது'. “நான் அவரை விசுவாசிக்கிறேன்” அல்லது நான் அவரை விசுவாசிக்கவில்லை “ என்று ஏதாவது ஒன்றை நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். ”நான் சுகமடையப்போகிறேன்“ அல்லது ”நான் சுகமடைவதற்கான போதுமான விசுவாசம் என்னிடத்தில் இல்லை“ என்று உங்கள் தீர்மானத்தை நீங்கள் எடுத்தாக வேண்டும். இன்றிரவு, நீங்கள் ஒரு பாவியாக இருப்பீர்களானால், நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தாக வேண்டும். நீங்கள் காதேஸ்-பர்னேயாவில் இருக்கிறீர்கள், நீங்கள் நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். அந்த சிறிய ஊற்றுகளும், அல்லது சபைகளும் எதை பிரதிநிதிப்படுத்துகிறது? தேவனுடைய வீட்டில் எப்பொழுதும் போல நியாயத்தீர்ப்பு துவங்குகிறது... இயேசு அவ்விதமாக கூறியிருக்கிறார்; வேதாகமமும் அவ்விதமாக கூறுகிறது. நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்குகிறது; நாம் இன்றிரவு தேவனுடைய வீட்டில் இருக்கிறோம். எனவே நீங்கள் உங்கள் தீர்மானத்தை எடுத்தாக வேண்டும். இன்றிரவு நீங்கள் கிறிஸ்துவண்டை வரப்போகிறீர்களா அல்லது அவரை நீங்கள் புறக்கணிக்கப்போகிறீர்களா என்று உங்கள் தீர்மானத்தை நீங்கள் எடுத்தாக வேண்டும். இங்கிருக்கிற ஒவ்வொரு பாவியும் சரியாக இப்பொழுதே அந்த தீர்மானத்தை எடுத்தாக வேண்டும். ஒன்று நீங்கள் உள்ளே வரும்போது இருந்ததைக் காட்டிலும் திரும்பிப்போகும் போது ஒரு சிறந்த புருஷனாகவோ அல்லது ஸ்திரீயாகவோ அந்த கதவு வழியாக வெளியே செல்வீர்கள் அல்லது நீங்கள் உள்ளே வரும்போது இருந்ததைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் வெளியே திரும்பி செல்வீர்கள். நீங்கள் இந்த இரண்டுக்கும் நடுவில் நிற்க முடியாது, நீங்கள் அதை (ஒரு முடிவை) செய்தாக வேண்டும். 67அது என்னுடைய இருதயத்தில் இருந்தது; எப்படியெனில் என்னுடைய இருதயத்தில் இருக்கிற இது, இப்பொழுது உங்களுடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய தீர்மானத்தை நீங்கள் எடுத்தாக வேண்டும். நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தே ஆகவேண்டும். ஒருவேளை நீங்கள் ஒரு நல்ல சபை அங்கத்தினராக இருந்திருக்கலாம். ஒரு வேளை உங்களுக்கு தேவன் அதிகமாக வேண்டும் என்று எப்பொழுதும் நீங்கள் வாஞ்சித்திருக்கலாம். மேலும் தேவனுக்கென்று ஏதாவது செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டும் இருக்கலாம். ஞாபகம் கொள்ளுங்கள், ஒருமுறை மட்டுமே நீங்கள் மானிடர்களாய் பிறக்கிறீர்கள் மற்றும் அந்த ஒரு முறைதான் நீங்கள் மானிடர்களாய் இருக்கக்கூடிய நேரமாய் இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் தீர்மானத்தை எடுக்கக்கூடிய நேரம் இதுவாக இருக்கக்கூடும், எப்படியெனில் ஒன்று நீங்கள் தேவனோடு கூட தொடர்ந்து போகவேண்டும் அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே தரித்திருக்க வேண்டியதுதான். இன்றிரவு நீங்கள் உங்கள் தீர்மானத்தை எடுத்தாக வேண்டும். அது என்னவாயிருந்தாலும், நீங்கள்அவை ஒவ்வொன்றையும் கழற்றி, தூக்கியெறியவேண்டும் என்று நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், அது என்னவாயிருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை; அது வேலையானாலும், அது குடும்பமானாலும், அது உங்கள் அன்பானவர் களானாலும், அது கூட பணிபுரிபவர்களானாலும், அது உங்கள் கூட்டாளியானாலும், அது என்னவாயிருந் தாலும், ஒவ்வொன்றையும் கழற்றிவிடுங்கள். “கலப்பையின் மேல் கை வைத்து, திரும்பிப் பார்க்கிறவன், தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு தகுதியானவன் அல்ல”. “பாரமான யாவற்றையும், நம்மை சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிடுங்கள். அதற்கு அர்த்தம் என்ன? பாரமான யாவற்றையும் மற்றும் நம்மை மிக சுலபமாக ஒடுக்குகிற அவிசுவாசத்தையும் தள்ளி, நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தை பொறுமையோடே ஓடக்கடவோம். நாம் ஜெபம் செய்வோமாக? 68பரலோகப் பிதாவே, தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இந்த செய்தியை நான் பிரசங்கம் செய்து, மக்களின் இருதயத்தின் மேல் போடுகிறேன். எல்லா புருஷர்கள் மற்றும் ஸ்திரீகளின் இருதயத்தை அறிந்தவரே; ஒவ்வொரு பையன் மற்றும் பெண்ணின் இருதயத்தை அறிந்தவரே; உமக்கு எல்லோருடைய இருதயமும் தெரியும்... இருந்தது முதல் என்னுடைய இருதயத்தை அறிவீர். கர்த்தாவே, பிரசங்க பீடத்திலிருந்து, பராமரிப்பவர் வரை இருக்கும் ஒவ்வொரு நபரின் இருதயத்தையும் நீர் அறிவீர். எங்களுக்கு என்ன தேவை என்பதை நீர்அறிவீர், நாங்கள் அதை அறியோம். எங்களுக்கு ஒரே ஒரு காரியம் தான் தெரியும், அது எங்களுக்கு இயேசு தேவை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஓ, தேவனுடைய கிறிஸ்துவே, நீர் வாக்குத்தத்தம் பண்ணி, அதை நிறைவேற்றாமல் இருக்கமாட்டீர். இல்லை ஆண்டவரே, நீர்,“என்னுடைய நாமத்தினால் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடுகிறார்களோ, அவர்கள் மத்தியில் நான் இருப்பேன். மேலும் என்னுடைய நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்”,என்று கூறியிருக்கிறீர். எங்களுடைய சபைக்கு அது எப்பேற்பட்ட ஒரு சவாலாய் இருக்கிறது. ஆண்டவரே; எங்களுடைய சமுதாயத்திற்கு அது எப்பேற்பட்ட ஒரு சவாலாய் இருக்கிறது. இன்றிரவு, எங்களுடைய மக்களுக்கு நீர் கொடுத்தது, அது எப்பேற்பட்ட ஒரு சவாலாய் இருக்கிறது. நீங்கள் ஏதாவது காரியத்தில் குறைவுபட்டிருந்தால், தேவனிடத்தில் கேளுங்கள், அதை உங்களுக்கு அவர் தருவார். அன்பான பரலோகப் பிதாவே இன்றிரவில், நாங்கள் பாவிகள் என்று உள்ளத்தில் உறைக்கசெய்யும் பரிசுத்த ஆவியை எந்த தங்கு தடையின்றி பொழிந்தருளும் படிக்கு, இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். மேலும் கிறிஸ்துவின் நாமத்தில், உம்மீது நாங்கள் காத்துக்கொண்டிருக்கையில், அவர்களுடைய தேவை என்னவென்பதை அறிந்துக்கொள்ளவும், அதினோடு கூட என்னுடையதையும் நான் அறிந்து கொள்ளும்படிக்கு, அவர்களுடைய இருதயத்தில் குறையை சுட்டிக்காட்டும். 69இப்பொழுது நம்முடைய தலைகள் தாழ்த்தியிருக்கையில் (இந்த சகோதரி பியானோவில் நமக்கு ஒரு சுரத்தை (Chord) கொடுப்பார்), நான் உங்களை ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். இது நீங்கள் தீர்மானம் எடுக்கக்கூடிய ஒரு நேரமாய் இருக்கக்கூடும். கர்த்தராகிய இயேசுவினிடத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிற ஒரு புருஷனோ அல்லது ஸ்திரீயோ, பையனோ, பெண்ணோ , கிறிஸ்தவரல்லாத ஒருவரோ, ஒரு பாவியோ இங்கே இருக்கிறீர்களா? இந்த மணி வேளையில் ஏதோ ஒன்று உங்கள் இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கிறதைநீங்கள் உணருகிறீர்களா? உங்கள் தீர்மானத்தை எடுக்கும் வகையில், “கிறிஸ்துவை சேவிக்கும்படிக்கு இப்பொழுது நான் தீர்மானிக்கிறேன்”, என்று உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “இப்பொழுது நான் என்னுடைய தீர்மானத்தை எடுப்பேன்” என்று சொல்கிற , வேறு யாராவது இருக்கிறீர்களா? இளவயதான சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறு யாராவது இருக்கிறீர்களா? அங்கே பின்னால் இருக்கும் இளவயதான சீமாட்டியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது இருக்கிறீர்களா? உங்கள் தீர்மானத்தை எடுங்கள், எப்படியெனில், 'நான் இப்பொழுது கிறிஸ்துவை சேவிப்பேன். நான் என்னுடைய முடிவிற்கு வந்திருக்கிறேன். நான் ஒரு இக்கட்டான நிலைக்கு வந்திருக்கிறேன்; இதுவே நேரமாயிருக்கிறது. நான் காதேஸ் - பர்னேயாவில் இருக்கிறேன். தேவன் என் இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறார். என்னால் அங்கே செல்ல முடியுமா? என்னுடைய உலக கூட்டாளிகளை என்னால் விட்டு விடமுடியுமா? தேவன் வாக்குத்தத்தம்பண்ணின வாக்குத்தத்த தேசத்திற்கு என்னால் இவற்றை கடந்து செல்லமுடியுமா? நான் ஒரு காலேபாக இருக்கமுடியுமா? கால வரலாற்றில் நானும் ஒரு யோசுவாவாக இருக்க முடியுமா? தேவனுடைய புத்தகங்களில் நானும் ஒரு காலேப் அல்லது யோசுவாவாக இருக்க முடியுமா? அல்லது என்னுடைய கோழைத் தன் மனப்போக்கினால், பயந்துபின் வாங்கி, திரும்பி போகப்போகிறேனா?“ 70தேவனே, அதை ஒவ்வொரு ஆண், பெண்ணிடத்திலிருந்து எடுத்துப்போட்டு, அவரை ஒருதீர்மானம் எடுக்கிறவராக, இன்றிரவு அதை கிறிஸ்துவுக்கென்று செய்கிறவராக மாற்றும். நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? ஆ, இன்னும் ஒருவர் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக , நான் உங்களை அங்கே பின்னால் இருப்பதை காண்கிறேன். வெளியே இருக்கும் வேறு யாராவது அங்கே ஏதாவது ஒரு ஜன்னலண்டை நடந்து சென்று, அந்த ஜன்னலின் மேல் உங்கள் கரத்தை வைத்து, “கிறிஸ்துவுக்காக நான் என்னுடைய தீர்மானத்தை எடுக்கிறேன். நான் காதேஸ் - பர்னேயாவில் இருக்கிறேன், சகோதரன் பிரான்ஹாம்”, என்று சொல்லுங்கள். அவ்விதமாய் செய்யக்கூடிய இன்னும் வேறுயாராவது இங்கே இருக்கிறீர்களா?“ இன்றிரவு நான் என்னுடைய தீர்மானத்தை எடுக்கிறேன். ஒரு மீறுதல்காரனின் வழிகள் கடினமானது. இனிமேல் இன்றிரவு முதல் நான் ஒருபோதும் உலகத்தை சேவிக்கப் போவதில்லை, நான் கிறிஸ்துவை சேவிக்கப் போகிறேன். இப்பொழுது நான் என் தீர்மானத்தை எடுக்கிறேன். நான் ஒரு பாவியாகவும், அதே சமயத்தில் நான் ஒரு கிறிஸ்தவனாகவும் இருந்தேன், ஆனால் நான் பின்வாங்கிப்போயி ருந்தேன், எனவே தேவன் என்மேல் இரக்கமாயி ருக்கும்படிக்கு என் கரத்தை உயர்த்துகிறேன்”, என்று சொல்லக் கூடிய ஒரு பின்வாங்கிப்போனவர் இங்கே இருக்கிறாரா? 71ஒரு தேவனுடைய நபரோ அல்லது ஒரு மனிதனான , ஒரு கிறிஸ்தவர் எவராவது ஒருவர் இந்த இரவில் இங்கே இருக்கிறீர்களா? ஆனால் அந்த வழியில் நீங்கள் காலங்கடத்திக் கொண்டு இருந்தீர்கள்; நீங்கள் தேவன் உங்களுக்கு கூறினவிதம் செய்யாமலிருந் தீர்கள்; நீங்கள் மேலும், கீழுமாய் இருந்தீர்கள், நீங்கள் செவிகொடுக்கக் கூடாதகாரியங் களுக்கு செவிகொடுத்திருந்தீர்கள்; நீங்கள் செய்யக் கூடாத காரியங்களை நீங்கள் செய்திருந்தீர்கள்; எனவே தேவன் உங்களை மன்னிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் மற்றும் இந்த இரவிலிருந்து நீங்கள் ஒருபுதிய துவக்கத்தை துவங்க வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். சரியாக இப்பொழுதே நீங்கள் தேவனுக்கென்று உங்கள் தீர்மானத்தை எடுத்து, “நான் அதை செய்வேன்”,என்று கூறுங்கள். நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை , உங்களை, உங்களை, ஓ, அது மிகவும் அருமை. சரிதான். இன்னும் வேறு யாராவது இருந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் அதின் மூலம் நீங்கள் தேவனுக்கு அதை தெரியப்படுத்து கிறீர்கள். தேவன் உங்கள் கரங்களை பார்க்கிறார். நீங்கள் கூறலாம், “அது என்ன நன்மையை எனக்கு செய்யப்போகிறதென்று?” ஓ, ஒரு தடவை நீங்கள் தேவனிடத்தில் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அதற்கு பிறகு அது என்ன செய்கிறது என்று பாருங்கள். நீதிமன்றங்களில் உங்கள் கரங்களை உயர்த்தி, பொய்யாய் சத்தியம் பண்ணுகிறீர்கள், அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். அதைக் கொண்டே நீங்கள் பிடிக்கப்படுவீர்கள். அவ்விதமே நீங்கள் தேவனிடத்தில் கரங்களை உயர்த்தி, அவரிடத்தில் உறுதிமொழி செய்துகொள்கிறீர்கள். அதன் பின்னர் அதைக்கொண்டே பரிசுத்த ஆவியானவர் உங்களை பிடிக்கிறாரா இல்லையா என்று பாருங்கள். தேவன் உன் இருதய கதவண்டை யில் இருக்கிறார். எனவே உங்களுடைய தீர்மானத்தை நீங்கள் எடுங்கள். நீங்கள் காதேஸ் - பர்னேயாவில் இருக்கிறீர்கள். தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஒவ்வொரு ஆசீர்வாதமும் அங்கே இருக்கிறது. ஒரு பண்டைய பாணியிலான எழுப்புதலும் அங்கே இருக்கிறது. அங்கே சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், தயை, சாந்தம், பொறுமை இருக்கிறது; அது உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது, அதை சுதந்தரித்துக் கொள்ளமாட்டீர்களா? அது உங்களுடையது; தேவன் அதை உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அது உங்களுக்கு தேவைப்படவில்லையா? 72இங்கே உடைந்து போகிற நிலையில் இருக்கிற ஏதாவது ஒரு குடும்பம் இருக்கிறதா? நீங்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து, குழப்பத்தை உண்டு பண்ணிக்கொள் கிறீர்கள். அதை நீங்கள் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியும்; அவ்விதமாய் உங்கள் மனைவி அல்லது உங்கள் புருஷனிடத்தில் நடந்து கொண்டதற்கு, நீங்கள் வெட்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். எனவே, அவருடைய கிருபையைக் கொண்டும், அதை மேற்கொள்வதற்கு உங்களுக்கு கிருபை வேண்டும் என்றும்; அவன் அல்லது அவளை சுற்றி உங்கள் கரங்களைப் போட்டு, “தேனே, தேவனுடைய கிருபையைக் கொண்டு இன்று இரவு முதல், நான் தேவனுக்காக ஜீவிப்பேன், அதுவே நம்முடைய தீர்மானம்”, என்று கூறுவதற்கு உங்களுக்கு இந்த இரவு தேவன் தேவைப்படுகிறதாயிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அப்படிப்பட்ட குடும்பம் ஒன்று இருக்கிறதா? இப்பொழுது ஒவ்வொருவரும் உங்கள் தலைகளை தாழ்த்தியிருக்கையில், உங்கள் கரத்தை மட்டும் உயர்த்துங்கள். (ஒலிநாடாவில் காலியிடம்) நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அப்படிப்பட்ட காரியம் இல்லாததற்கு, ஆனால் அப்படிப்பட்ட காரியம் இருக்குமானால், எப்படி எல்லா காரியத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தேவனுக்கு தெரியும். 73நீண்ட நாட்களாக வியாதிப்பட்டிருக்கிற நபர் எவராவது இன்றிரவு இங்கே இருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள், அதற்காக உங்களுக்கு ஜெபம் செய்யப்பட்டிருக்கலாம், ஆனால்அதை மேற்கொள்வதற்கான விசுவாசம் உங்களிடத்தில் இல்லாதது போல் உங்களுக்கு காணப்பட்டிருக்கலாம். எனவே சரியாக இப்பொழுதே, நீங்கள் உங்கள் தீர்மானத்தை எடுக்கப் போகிறீர்கள், “கர்த்தராகிய தேவனே, இந்த மணி வேளையிலிருந்து, நான் உம்மை சேவிக்கப்போகிறேன்.தேவனுடைய கிருபைக்காக அவருடைய தழும்புகளால் நான் குணமானேன் என்ற சாட்சி கூறினபடி நான் இங்கிருந்து வெளியே புறப்பட்டு செல்கிறேன். எனவே, இன்று இரவு முதல் அதை நான் விசுவாசிக்கப் போகிறேன்”. சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அருமை. அது சரிதான். இன்னும் ஒரு சில நிமிடங்களில் உங்களுக்காக நான் ஜெபிக்கப் போகிறேன். அதை உங்களுக்கு அளிக்கும்படிக்கு தேவனிடத்தில் நான் கேட்கப் போகிறேன். 74இங்கிருக்கும் நபர்களில், கிறிஸ்தவரல்லாத நபர் ஒருவர் பிரசங்க பீடத்தண்டை வந்து, முழங்காற்படியிட வேண்டும் என்று நான் இன்றிரவு ஆவலாயிருக்கிறேன். நீங்கள் தேவனிடத்தில் வெளிப்படையாக ஜெபிக்க வேண்டுமென்று இருப்பீர்களானால், இந்த பிரசங்கபீடம் திறந்திருக்கிறது. இந்த பிரசங்கபீடம் திறந்திருக்கிறது. அது பின்வாங்கிப்போன வராயிருந்தாலும், அல்லது எந்த வழிப்போக்க மனிதனாயிருந்தாலும், அது யாராயிருந் தாலும், இந்த பிரசங்க பீடம்திறந்திருக்கிறது. நீங்கள் வரவேற்க்கப்படுகிறீர்கள். நீங்கள் காதேஷில் இருக்கிறீர்கள்; நியாயத்தீர்ப்பானது போய்க்கொண்டி ருக்கிறது. தன் கரங்களை விரித்தபடியும், ஆயத்தமாகவும் தேவன் நின்று கொண்டிருக்கிறார். 75இப்பொழுது கிறிஸ்துவை அவர்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டதை சபையார் மத்தியில் அறிக்கையிட விரும்புகிற ஒரு வியாதிப்பட்ட நபர் எழுந்து நின்று, “இந்தஇரவு முதல், நான் தேவனை விசுவாசிப்பேன்”, என்று கூறலாம். மேலும் அவர்களுக்கு ஜெபம் தேவைப்படுமானால், உங்களால் வர முடிந்தால், நீங்கள் எழுந்துநிற்கும்படிக்கு வரவேற்க்கப்படுகிறீர்கள். சரி, உங்களில் மூன்று பேர் எழுந்து நிற்கிறீர்கள், உங்களால் முடியுமானால் தொடர்ந்து நின்றுகொண்டிருங் கள். 76இப்பொழுது, பரலோகப் பிதாவே, பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் பேசினதைக் கேட்டு, எழுந்து நின்று கொண்டிருக்கிறார்கள். சற்றுமுன்பு எழுந்து நின்ற இந்த மனிதனுக்கும், மற்றும் இந்த ஸ்திரீ மற்றும், இந்த இன்னொரு மனிதன் இவர்கள் இருவருக்கும் உம்முடைய கிருபைகள் அளிக்கப்பட வேண்டும் என்று நான் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். பரலோகப் பிதாவே, ஓ, நித்திய தேவனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் அவர்கள் சுகமாக்கப்பட்டார்கள். தேவனே, இதை நீரே கீழே கொண்டு வந்து, இதை அவர்களுக்கு நீர் நிஜமானதாக மாற்றிக் கொடுத்தீர். கர்த்தாவே, நீர்,“பிதாவானவர் அவனை அழைக்காவிடில் ஒருவனும் என்னிடத்தில் வரான்”, என்று கூறியிருக்கிறீர்.இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் பேசியிருக்கிறார். அதற்கு மேல்வேறொன்றும் செய்யப்பட முடியாது. அவர்கள் தங்களுடைய தீர்மானத்தை எடுத்திருக்கிறார்கள், அது, உம்மை அவர்கள் தங்களுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இயல்பு நிலையையும், சுகத்தையும் பெற்றுக்கொள்வார்கள் என்று விசுவாசித்தபடி இந்த கூடாரத்தை விட்டு வெளியே செல்கிறார்கள். கர்த்தாவே, அது தோற்றுப் போகாது, அப்படி ஆகுமானால் அது தேவனே தோற்றுப்போனதாகிவிடும். அவருடைய வார்த்தையை காட்டிலும் எந்த மனிதனும் அதற்கு மேல் தகுதியானவன் அல்ல என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். எனவே, இன்றிரவு அவர்கள் உம்மை விசுவாசித்து, உம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, கர்த்தாவே, இந்த விசுவாச ஜெபத்தை அவர்களுக்காக நான் ஜெபிக்கையில், அவர்கள் அதை பெற்றுக்கொள்ளட்டும். கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். நீங்கள் உட்காரலாம், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசி யுங்கள், உங்கள் எல்லா தொல்லை களும் ஒழிந்துபோம். 77உங்களில் எத்தனைபேர் அவரை நேசித்து, அவரோடு கூட சீயோனுக்கு வீறு நடைபோட்டு செல்ல விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்கள் மேலே உயர்த்தப்படுவதை நான் பார்க்கட்டும். அது அருமையாயிருக்கிறது. நீங்கள் எந்த சபையை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பரவாயில்லை . சரி! இயேசுவின் நாமத்தை எடுத்து செல்லுங்கள் என்ற பாடலை நாம் பாடும்போது, எழுந்து நம்முடைய கால்களில் நிற்போம். நல்லது சகோதரியே, நீங்கள்... எங்களுக்கு கொடுப்பீர்களானால், இயேசுவின்நாமத்தை எடுத்து... இப்பொழுது, அப்படியே பின்னுக்கு திரும்பி, உங்களுக்கு அருகாமையில் இருக்கும் மற்றொருவருடன் கை குலுக்குங்கள். உங்களை சுற்றிலும் இருக்கிறவர்களிடத்தில் சென்று, கைகுலுக்குங்கள். ...துயரத்தில், அது உங்களுக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் கொடுக்கும். நீங்கள் எங்கு சென்றாலும், அதைகொண்டு செல்லுங்கள். ஓ, விலையேறப் பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ, எவ்வளவு இனிமையானது! பூவுலகின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாயிருக்கிறது விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ, எவ்வளவு இனிமையானது! பூவுலகின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாயிருக்கிறது. விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ, எவ்வளவு இனிமையானது. உங்கள்முழு இருதயத்தோடும், உங்கள்முழு ஆத்துமாவோடும், உங்கள்முழு மனதோடும், உங்கள்முழு பெலத்தோடும் அவர் மீது மிக உன்னத அன்பு வைத்திருக்கும் நீங்கள் யாவரும்இவ்விதமாக உங்கள் கரங்களை உயர்த்தி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”,என்று சொல்லுங்கள். அது நல்லது. சரி, இப்பொழுது: இயேசுவின் நாமத்திற்கு தலைவணங்கி, அவருடைய பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து, நம்முடைய யாத்திரை முடிவுக்கு வந்ததும், பரலோகத்தில் இருக்கும் இராஜாதி இராஜாவே உம்மை நாங்கள் முடிசூட்டுவோம். விலையேறப்பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமையானது! பூவுலகின்நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாயிருக்கிறது; விலையேறப்பெற்ற நாமம், ஓ, எவ்வளவு இனிமையானது (எவ்வளவு இனிமையானது). பூவுலகின் நம்பிகையும், பரலோகத்தின் சந்தோஷமுமாயிருக்கிறது.